Saturday 29 October 2016

தீபாவளி நல்வாழ்த்துக்கள்




அனைவர்க்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை திருநெல்வேலி மாவட்ட BSNLEU சங்கம் தெரிவித்து கொள்கிறது 



Sunday 23 October 2016

27.10.2016 ஆர்ப்பாட்ட அறைகூவலை




27.10.2016 ஆர்ப்பாட்ட அறைகூவலை வெற்றிகரமாக்குவோம்.

அருமைத் தோழர்களே ! நமது BSNL-லில்  மத்திய அரசின் துணை டவர் நிறுவனம் அமைக்கும் திட்டத்தை  எதிர்த்து 27.10.2016 FORUMத்தின் ஆர்ப்பாட்ட அறைகூவலை வெற்றிகரமாக்குவோம் . . .
நாடு முழுவதுமுள்ள 65000 செல் கோபுரங்களை தனியாகப்பிரித்து 20000 கோடி மதிப்பீட்டில்..
துணை நிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து 
27/10/2016 BSNL  அனைத்து சங்கங்களின் சார்பாக நாடு தழுவியஆர்ப்பாட்டம்
இன்றைய நிலைமையில் இந்தியா எங்கும் உள்ள நமது BSNL டவர்களை மற்ற நிறுவனங்கள்வருமானத்தை பெருக்கி கொள்வதற்காக பகிர்ந்து கொள்வதை தடுத்து நிறுத்திட வேண்டும். எந்தமுகாந்திரமும் இல்லாமல் துணை டவர் கம்பெனி ஆக மாற்ற காரணம் என்ன ?  இதன் மூலம் டவர்மீதுள்ள நமது பிடிமானம் போய்விடும்இது நமது BSNL நிறுவனத்தின் பொருளாதாரம் மேலும்சீர்கெடும் நிலைமைக்கு தள்ளி விடும் கொஞ்சம் கொஞ்சமாக தரைவழி சேவை மட்டுமே நம்மிடம்இருக்கின்ற நிலைமைக்கு போய்விடும். இது நமது BSNL நிறுவனத்தை படுகுழியில் தள்ளும்நரேந்திர மோடி அரசின் திட்டமாகும்இதனை நாம் முறியடிக்க வேண்டும்BSNL  என்னும் பெருநிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்க முயலும்...தனி நிறுவன  துணை நிறுவன முயற்சியைத்தடுப்போம்...ஒன்றாய் அணி திரள்வீர் தோழர்களே என, அறைகூவி அழைக்கின்றோம்

அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேச்சு





பிஎஸ்என்எல் லாபம் ஈட்டியதில் ஊழியர் சங்கத்திற்கும் பெரும்பங்கு உள்ளது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேச்சு




பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத் தின் 8வது அகில இந்திய மாநாடு வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி துவங்கி ஜனவரி 3ம் தேதி வரை 4 நாட்கள் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான வரவேற்புக் குழு கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் வியாழனன்று (அக். 20) சென்னையில் நடைபெற்றது.சர்க்கிள் செயலாளர் ஏ.பாபுராதாகிருஷ்ணன் வரவேற்றார்.டி.கே.ரங்கராஜன் பேசுகையில் பிஎஸ்என்எல் முந்தைய ஆண்டுகளை விட கடந்தாண்டு லாபம் ஈட்டியுள்ளது. இதில் ஊழியர் சங்கத்திற் கும் பெரும் பங்குள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களின் லாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக இங் குள்ள தொழிலாளர்கள் சுரண்டப் படுகிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கைகளின் ஷரத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஆளும் வர்க் கம் அவர்களது நோக்கத்தை மட்டுமே நோக்கி பயணிக்கிறார்கள். அவர்களுக்கு ஒத்து வராதவர்களை வெளியே எடுத்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு வங்கியின் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்று சொன்ன ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜனை அப்பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இந்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. படித்து வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால்தான் புதிய கல்விக் கொள்கையை அறிவித்து அதன்மூலம் கல்விதர மறுக்கிறது மத்திய அரசு. அனைவருக்கும் இலவச கல்வி, வேலை , ஆண் பெண் சமத் துவம் என்பது ஜனநாயக கோஷம். தீண்டாமை, ஆணவப் படுகொலை இவற்றுக்கெதிரான உறுதியான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும் என்றார்.தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் பி.சம்பத் பேசுகையில் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கை என்பது தொழிலாளர் களை மட்டும் பாதிக்கவில்லை. அது தேச விரோதக் கொள்கையாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் சாதகமான கொள்கை. இதை ஊழியர் சங்கம் முறியடிக்கும். ஒப்பந்த முறையை எதிர்க்கிறோம். அதே நேரத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. செப். 2 ஒரு நாள் வேலை நிறுத்தம் என்பது மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வருங் காலங்களில் தொடர் வேலை நிறுத்தமாக நடைபெறும். மதவாத, வகுப்புவாத சக்திகளிடம் நாடு சிக்கிக் கொண்டுள்ளது.மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். இதற்கெதிரான வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும் என்றார்.பிஎஸ்என்எல்இயு பொதுச் செயலாளர் பி.அபிமன்யூ பேசுகையில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட சங்க மாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கும் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகித அடிப் படையில் பிரதிநிதித் துவம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து அதிலும் வெற்றி பெற்றுள்ளது. தொலைத் தொடர்புத் துறையை தனியார்மயமாக்காமல் இருக்க மென்மேலும் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. பி.எஸ்.என்.எல். டவர்களை தனிநிறுவனமாக மாற்றும் முயற் சியை எதிர்த்து, வரும் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரதூதராக இருக்கி றார் பிரதமர் மோடி. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பி.எஸ்.என்.எல்.தான் போட்டியாக உள்ளது. மாதா மாதம் இணைப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.ரிலையன்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஜியோவை அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்த மாதம் மட்டும் பி.எஸ்.என்.எல். 2,50,000 புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் இலவச வாய்ஸ் காலை வழங்க உள்ளது பி.எஸ்.என்.எல். நிறுவனம். இதற்கு ஊழியர் சங்கத் திற்கு பெரும் பங்குண்டு என்றார்.சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேசுகையில் தொலைதொடர்புத் துறை ஊழியர்களுக்கு இது சவால்கள் நிறைந்த காலம். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது பழமொழி. ஆனால் இந்திய பிரதமர் மோடி அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஆதரவாக இல்லாமல், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறார். மேலும் 24 மணி நேரமும் தனியார்மய சிந்தனையிலேயே செயல் படுகிறார் நம் பாரத பிரதமர் மோடி. இந்திய நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. ஊழியர் சங்கம் ஊழியர்களின் கோரிக்கையோடு நிறுவனத்தையும் பாதுகாக்கப் போராடி வருவது பாராட்டுக்கு உரியது. அனைத்து போராட்டங்களிலும் ஒப்பந்த தொழிலாளர்களை இணைத்துக் கொண்டு போராட வேண்டும். உங்களது அனைத்துப் போராட்டத்திற்கும் சிஐடியு ஆதரவளிக்கும் என்றார்.சிஐடியு துணைச் செயலாளர் ஆர்.கருமலையான், ஊழியர் சங்கத்தின் உதவி பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா, பி.எஸ்.என்.எல். பெண்கள் அமைப்பின் கன்வீனர் பி.இந்திரா, போஸ்டல் ஊழியர் சங்க நிர்வாகி ஜி.கண்ணன், காப்பீட்டு ஊழியர் சங்க நிர்வாகி டி.செந்தில்குமார் உள்ளிட்டோரும் பேசினர். மாநாட்டிற்கு விருதுநகர் மாவட்டத்தின் சார்பில் 3 லட்ச ரூபாயும், நாகர்கோயில்  மாவட்டம் சார்பில் 3.25 லட்ச ரூபாயும், ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பில் முதல் தவணையாக 22 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. ஊழியர் சங்கத்தின் பொருளாளர் கே.சீனிவாசன் நன்றி கூறினார். இதில் ஊழியர் சங்க நிர்வாகி கே.கோவிந்தராஜ், பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் எம்.முருகைய்யா, சி.பழனிச்சாமி மற்றும் மாநிலம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நன்றி :- தீக்கதிர்



Tuesday 18 October 2016

ஊழியர்கள் 300 நாட்களுக்கு மேல் விடுப்பை சேர்த்துவைத்துக் கொள்ளலாம்:-



ஊழியர்கள் 300 நாட்களுக்கு மேல் விடுப்பை சேர்த்துவைத்துக் கொள்ளலாம்:-
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதி மன்றம் ஒரு ஊழியர் அதிகபட்சமாக 300 நாட்கள் விடுப்பை காசாக்கிக் கொள்ளலாம் என்று இருந்தாலும், ஒரு ஊழியர் எடுக்காமல் வைத்திருக்கும் விடுப்பை 300 நாட்களுக்கு குறைக்கக் கூடாது என ஒரு சிறப்பான தீர்ப்பை சொல்லி உள்ளது. ” ஒரு ஊழியர் அதிகபட்சமாக 300 நாட்கள் விடுப்பை மட்டுமே காசாக்கிக் கொள்ளலாம் என இருந்தாலும், அதிகபட்ச வரம்பாக அவர் பயன்படுத்தாத விடுப்பை 300 நாட்கள் மட்டுமே என குறைக்கக் கூடாது என்பது அதன் பொருள் அல்ல. ஒரு ஊழியர் ஓய்வு பெறும் வரை அவரது விடுப்பு சேர்த்துக் கொள்ளலாம்; மனுதாரர் சட்டத்தில் உள்ளது போல அதிகபட்சமாக 300 நாட்கள் விடுப்பை காசாக்கிக் கொள்ளலாம்” என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Sunday 16 October 2016

Make the 26th demonstration a grand success

Mobilise the employees for serious struggles against formation of Subsidiary Tower Company. Make the 26th demonstration a grand success

The Forum and BSNLEU  have already stiffly opposed the move of the government to form a Subsidiary Tower Company. Under this circumstance, it is disturbing to learn that the Minister of State for Communications has signed the Cabinet Note, for the formation of the Subsidiary Tower Company. If the Cabinet approves this note, then the entire tower asset of BSNL will be taken away, and a separate tower company will be formed. The government assures that this company will be a subsidiary company of BSNL, and that it will be a 100% government company. However, this is only a clever move of the government to weaken BSNL. At a time when the Niti Aayog is working over time to privatise / close down public sector  companies, it is needless to say that the Subsidiary Tower Company will soon become it's target. There is every possibility that strategic sale will be started in the Subsidiary Tower Company sooner than later. In short,  formation of the Subsidiary Tower Company will be the beginning of BSNL’s end. In the past also, on many occasions the government has tried to start disinvestment in BSNL. However, the united trade union movement of BSNL has gone on heroic struggles and has defeated those moves. Now also, if the entire unions and associations join together, certainly the move of the government to form a Subsidiary Tower Company can be defeated. The Core Committee of the Forum, which met on 14-10-2016, has decided to conduct massive demonstrations on 26-10-2016. All circle and district unions are called upon to immediately start mobilising the employees for serious struggles against formation of the Subsidiary Tower Company. As a first step, make the 26th demonstration a grand success.

பெருந்திரள் முறையீடு





பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் 25.10.2016 அன்று சென்னையில் உள்ள தமிழக BSNL தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு
ஒப்பந்ததாரர் மாறிவிட்டார் என்ற காரணத்தை காட்டி தமிழக தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகாலத்திற்கு மேல் பணியாற்றி வரும் 11 ஒப்பந்த தொழிலாளர்கள் 01.10.2016 முதல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடுமைக்கு எதிராக CGM அலுவலக மாவட்ட சங்கம் இரண்டு கட்ட போராட்டங்களை நடத்தியது. அதன் பின்னர் BSNLEU மற்றும் TNTCWU ஆகிய இரண்டு சங்கங்களின் சார்பாக தமிழகத்தில் அனைத்து கிளைகளிலும், 07.10.2016 அன்று சக்தி மிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 14.10.2016 அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மாலை நேர தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. GM(HR) உள்ளிட்ட அதிகாரிகள் 15.10.2016 அன்று நடைபெற உள்ள முத்தரப்பு கூட்டத்தில் சுமுக தீர்வு ஏற்பட்டுவிடும் என்று கூறி நமது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தனர். நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாமும் 14.10.2016 தர்ணா போராட்டத்தை ஒத்தி வைத்தோம். ஆனால் இன்று (15.10.2016) நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒப்பந்ததாரர் வரவில்லை. நிர்வாகம் ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் மூன்று ஊழியர்களை மட்டும் எடுக்க ஒத்துக் கொண்டதாகவும், மற்றவர்களை பணிக்கு எடுக்க மறுத்து விட்டார் என்று நம்மிடம் தெரிவித்து விட்டனர். தங்களால் வேறு ஏதும் செய்ய இயலாது என்றும் தெரிவித்து விட்டனர். நாம் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிக்கு எடுப்பதை தவிர வேறு எந்த உடன்பாட்டிற்கும் வர இயலாது என்பதை மிகத் தெளிவாக தெரிவித்து விட்டோம். எனவே நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி 25.10.2016 அன்று சென்னையில் உள்ள தமிழக BSNL தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு கண்டிப்பாக நடைபெறும் என அறிவித்துள்ளோம். எனவே 25.10.2016 அன்று நமது தோழர்களை பெருவாரியாக திரட்டி சென்னையை நோக்கி அணி திரள வேண்டும் என இரண்டு மாநில சங்கங்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். பணி நீக்க கொடுமையினை எதிர்த்து ஆர்ப்பரிப்போம்!!! பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்களை பணிக்கு எடுக்க வைப்போம்!!!

FORUM முடிவுகள்




FORUM முடிவுகள்
FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONSன் CORE COMMITTEE கூட்டம் கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள அறை எண் 706ல் தோழர் பிரகலாத் ராய் GS AIBSNLEA தலைமையில் 14.10.2016 அன்று நடைபெற்றது. அதில் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன:- 1) BSNLன் எதிர்காலத்தை சீரழிக்கக்கூடிய துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியில் அரசாங்கம் வேகமாக செயல்படுவதாக தெரியவந்துள்ளது. எனவே துணை டவர் நிறுவனம் அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்து 26.10.2016 அன்று மாவட்ட, மாநில மற்றும் அகில இந்திய மட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 17.11.2016 அன்று நடைபெற உள்ள FORUMத்தின் அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். 2) BSNLன் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது தொடர்பாக, தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அதிகப்படியான எண்ணிக்கையில் மொபைல் இணைப்புகளை BSNL தந்து வருவதற்காக அனைத்து ஊழியர்களையும் நிர்வாகத்தையும் கூட்டம் பாராட்டியது. செப்டம்பர், 2016ல் BSNL 23 லட்சம் இணைப்புகளை வழங்கியதை இந்தக் கூட்டம் மனநிறைவுடன் பாராட்டியது. இந்த ஆண்டின் BSNL நிறுவனத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது எதிர்வரும் ஊதிய மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், நிறுவனத்தின் வருவாய் மற்றும் விற்பனைகளை மேலும் அதிகரிக்கச் செய்ய ஊழியர்களும், அதிகாரிகளும் அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த கூட்டம் அறைகூவல் விடுத்துள்ளது. மேலும் பழுதில்லா சேவைகளை பராமரிப்பதன் மூலம் சந்தாதாரர்களுக்கு நல்ல தரமான சேவைகளை தருவதற்கு சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஊழியர்களை கேட்டுக் கொள்கிறது. புதியதாக நுழைந்துள்ள ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை எதிர்கொள்வதற்கான திட்டங்களை தீட்டுவதற்காக 17.11.2016 அன்று FORUMத்தின் முழு அளவிலான கூட்டத்தைக் கூட்டி விவாதிப்பது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. 3) ஒரு சிலரின் நலன்களை பாதுகாப்பதற்காக, தொலை தொடர்பு துறை தொடர்பான மாதாந்திர இதழான ‘TELECOM LIVE’ என்ற பத்திரிக்கை BSNLன் மதிப்பை குலைக்கும் வகையில், BSNL தொடர்பான தவறான பல கட்டுரைகளையும் செய்திகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ‘TELECOM LIVE’ பத்திரிக்கையினை கண்டித்து 17.11.2016 அன்று கார்ப்பரேட் அலுவலகம் முன்பு மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்திட இந்தக் கூட்டம் முடிவு செய்துள்ளது. மேலும் TELECOM LIVE பத்திரிக்கையின் மீது PRESS COUNCIL OF INDIAவில் ஒரு புகார் கொடுப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 4) BSNLன் புத்தாக்கத்திற்காக நிர்வாகமும் ஊழியர்களும் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த முயற்சிகள் பலன் தர துவங்கியுள்ளன. எனினும் BSNLஐ ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் தொலை தொடர்பு துறை, உண்மையில் BSNLக்கு எதிரான முடிவுகளையே எடுத்து வருவதை இந்தக் கூட்டம் வருத்தத்துடன் கவனிக்கின்றது. எனவே BSNLன் புத்தாக்கத்திற்காக நிர்வாகமும் ஊழியர்களும் எடுத்து வரும் முயற்சிகளை பற்றியும், BSNLக்கு எதிராக தொலை தொடர்பு துறை எடுத்து வரும் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஒரு விரிவான கடிதத்தை மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்களுக்கு எழுதுவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Wednesday 12 October 2016

மாநில செயற்குழு கூட்டம்







கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு 
நமது தமிழ் மாநில  சங்கத்தின் செயற்குழு கூட்டம் வரும் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது .அன்று மாலை 4 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ள அனைத்திந்திய மாநாட்டு வரவேற்பு குழு கூட்டமும் நடைபெற உள்ளது .அகில இந்திய மாநாட்டு நிதி நிலுவை தொகையை வரும் 15 ஆம் தேதிக்குள் மாவட்ட சங்கத்திடம் செலுத்தி விட வேண்டும் என்று அனைத்து கிளை செயலர்களுக்கும் தோழமையுடன் கேட்டு கொள்கிறோம் . .


மாநிலசங்கங்க செய்தி



மாநிலசங்கங்க செய்தி



Read | Download

சுற்றறிக்கை எண்:132
தேர்வுகள் மற்றும் இதர செய்திகள்

Thursday 6 October 2016

பணி நீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பரிப்போம்






பணி நீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பரிப்போம்

CGM அலுவலகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 07.10.2016ல் தமிழகம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த  BSNL ஊழியர் சங்கம் மற்றும் TNTCWU தமிழ் மாநில சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.ஆர்ப்பாட்டத்தை அனைத்து கிளைகளிலும் வெற்றிகரமாக்க மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கின்றது

மாநில சங்க வேண்டுகோள்


மாநில சங்க வேண்டுகோள் 


Read | Download

Memorandum to Central Registrar
மத்திய பதிவாளருக்கு அனுப்ப வேண்டிய மனுவை சொசைட்டி உறுப்பினர்களிடம் மட்டும் கையெழுத்து பெற்று மாநிலச் சங்கத்திற்கு 15.10.2016க்குள் அனுப்பவேண்டும்.

பணி நீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பரிப்போம்







Read | Download

பணி நீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பரிப்போம்
CGM அலுவலகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 07.10.2016ல் தமிழகம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்துக- BSNL ஊழியர் சங்கம் மற்றும் TNTCWU தமிழ் மாநில சங்கங்கள்