Tuesday 31 December 2013

பணி ஓய்வு


1975 ஆண்டு துவக்கத்தில் தபால் தந்தி துறையில்

தொலைபேசி இயக்குனராக பணியில் சேர்ந்து

தொழிற்சங்க இயக்கத்தில் NFPTEயில் இணைந்து

அமரர் தோழர் K.G. போஸ் வழி காட்டலில் இயங்கி

தோழர் C.S .பஞ்சாபகேசன் போட்ட பாதையில் நடந்து

தொலைதொடர்பு துறைதொழிற்சங்கங்களில் 
சீர்திருத்தவாத தலைமைக்கு எதிராக போராடி

சங்கத்தில் தொழிற்சங்க ஜனநாயகத்தை நிலை நிறுத்தி  BSNLலில் BSNLEUவை உருவாக்கி

ஊழியர்கள் வாழ்வில் மேம்பாடு அடைந்திட அல்லும் பகலும் பாடுபட்டு நிறைவான ஊதியம் பெற்றுத் தந்து,

பதவி உயர்வுத் திட்டம் உருவாக்கி தனியார்மயத்தை தடுத்திட்ட மாமனிதர் தோழர் P. அபிமன்யு அவர்கள் இன்று ஒய்வு பெறுகிறார்.

 கடலூர் மாவட்ட்த்தில் பண்ருட்டி, விழுப்புரம் பகுதிகளிலும்,
தர்போது பாண்டிச்சேரியில்
பணியாற்றி, நமக்கு வழி காட்டியாக திகழ்ந்தவர் இன்று நிறுவனப் பணியில் இருந்து ஒய்வு பெறுகிறார்.

பெற்ற உரிமைகளை போற்றி பாதுகாத்திட அவர் பணி தொடரட்டும்..

அவர் நீடுழீ வாழ்க! வாழ்க!! என்று இந்நாளில் நமது திருநெல்வேலி  மாவட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.

பணி ஓய்வு



   இன்று (31-12-2013) பணி  ஓய்வு பெறும் நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு காலம் சிறக்க திருநெல்வேலி  மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .







Saturday 28 December 2013

07.01.2014- சேவை கருத்தரங்கத்திற்கு சிறப்பு விடுப்பு...

கண்ணீர் .....அஞ்சலி ....வருந்துகிறோம்.. .


கண்ணீர் .....அஞ்சலி ....வருந்துகிறோம்.. .

COM. T S RAJAN IS NO MORE
வருந்துகிறோம்...
  
    தோழர்.TSR, என அனைவராலும் அன்பாக  அழைக்கப்பட்ட அருமை தோழர். T.S.சுந்தரராஜன்,28.12.2013 காலை 7.15 மணிக்கு மறைந்து விட்டார் என்பதை   மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தோழர்.TSR. மும்பையில்,தனது மகன் வீட்டில்    தவறிக் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு,கடந்த 21.12.2013அன்று  மும்பை மருத்துவமனயில் சிகிச்சைக்காக  அனுமதிக் கப்பட்டிருந்தார்.
  தோழர்.TSR,எப்போதும் ஒரு போராளி யாகவே திகழ்ந்தவர் ஆவார். அனைவ ரோடும் அவர்  அன்பாக பழகக் கூடியவர்,தான் கொண்ட கொள்கையில் மிக உறுதியாக இறுதி வரை வாழ்ந்தவர்.தபால்-தந்தி தொழிற்சங்க இயக்கத்தில்   முன்னோடியாக,T3 & T4 சங்கங்களில் மத்திய,மாநில நிர்வாகியாக இருந்து பல்வேறு பிரச்சனைகளை தீர்த்துவைத்து,வழிகாட்டியாக இருந்த  தலைவர்.
      1968 போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டபோது புன்சிரிப்புடன் அதனை ஏற்றவர். பின்னர் சங்க முயற்சியால் திரும்பவும் பணியில் சேர்ந்து இறுதி மூச்சு வரை தொழிலாளிக்காகவும், இடதுசாரி கருத்துகளுக்காகவும் வாழ்ந்தவர்.  அவரது மறைவிற்கு செங்கொடி தாழ்த்தி நமது  மாவட்ட  சங்கம் அஞ்சலி செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு நமது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர்.TSR,மறைவிற்கு நமது BSNLEU சங்க கொடிதாழ்த்தி கிளை சங்கங்கள்  அஞ்சலி  செலுத்த வேண்டுமாய் நமது மாநில,மாவட்ட சங்கங்கள் கேட்டுக்கொள்கிறது .






MTNL ஊழியர்களுக்கு பென்சன் அமைச்சரவை ஒப்புதல் . . .

Tuesday 24 December 2013

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

மாறியுள்ள சூழ்நிலையில் தேசிய கவுன்சில்-சுற்றறிக்கை எண்:102



மாறியுள்ள சூழ்நிலையில் தேசிய கவுன்சில்-சுற்றறிக்கை எண்:102
Read | Download


 Download

29ஆவது தேசிய கவுன்சில் முடிவுகள்-சுற்றறிக்கை எண்:101




29ஆவது தேசிய கவுன்சில் முடிவுகள்-சுற்றறிக்கை எண்:101
Read | Download



Monday 23 December 2013

Friday 20 December 2013

E1சம்பள விகிதம்



E1சம்பள விகிதம்

19-12-2013 அன்று நடைபெற்ற நிர்வாக கமிட்டி கூட்டத்தில் E1 சம்பள விகிதம் ஏற்று கொள்ளப்பட்டு வர இருக்கும் பிஎஸ் என் எல் போர்டு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் .நமது போராட்ட அறைகூவலின்படி ஏற்பட்ட உடன்பாட்டில் இது நமது சங்கத்தின் சாதனையில் ஒரு மைல் கல்

7-1-2014 கருத்தரங்கம் போஸ்டர்.

பொதுச்செயலர் பணிநிறைவு பாராட்டு விழா

Thursday 19 December 2013

NEPP&வங்கி கடன்


NEPP

18-12-2013 அன்று நடைபெற்ற பிஎஸ்என்எல் போர்டு கூட்டத்தில் NEPP பதவி உயர்வின் கீழ் சராசரி உள்ளீடுகளை(AVERAGE ENTRY) தளர்த்துவதற்கு 18-10-2013 அன்று நமது சங்கத்துடன் ஏற்பட்ட உடன்பாட்டு அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது .



வங்கி கடன்

நமதுஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் கொடுப்பதற்கு காலவரையறை நீட்டித்து யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது .



Wednesday 18 December 2013

Lokpal Bill passed by Parliament



by vannamboodiri in 

At last the Lok Pal Bill is passed by both houses of the Parliament and will become an Act after the approval of the President.
All the political parties except SP supported the bill.It is not everybody was happy, but the results of the recent assembly elections, the people’s anger against the high corruption and the forthcoming General elections – all compelled even the unwilling parties also to support the bill.
There are many weakness in the bill, which has to be rectified later


Tuesday 17 December 2013

அட இந்தியாவில் இப்படியும் ஒரு 'ஏழை முதல்வர்'



அட இந்தியாவில் இப்படியும் ஒரு 'ஏழை முதல்வர்'

நாட்டிலேயே திரிபுரா மாநில முதல்வர் மானிக் சர்க்கார் தான் மிகவும் ஏழ்மையான முதல்வர் ஆவார். ஏழை முதல்வர் என்று தன்னை பிறர் கூறுவதில் அவர் பெருமை கொள்கிறார். திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இந்த தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று மானிக் சர்க்கார் தொடர்ந்து நான்காவது முறையாக முதல்வர் ஆனார். முன்னதாக அவர் கடந்த ஜனவரி மாதம் வேட்புமனு தாக்கல் செய்தபோது தனது சொத்து விவரங்களையும் தெரிவித்திருந்தார். அவரது சொத்து மதிப்பை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வேட்புமனு தாக்கல் செய்தபோது சர்க்காரின் கையில் வெறும் ரூ.1,080 ரொக்கம் மட்டுமே இருந்தது. அவரது வங்கிக் கணக்கில் ரூ.9,720 இருந்தது
சர்க்காரின் அம்மா அஞ்சலி சர்க்காருக்கு சொந்தமான டின் ஷெட் வடிவில் உள்ள 432 சதுர அடி வீடு அவருக்கு கிடைத்தது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.2 லட்சத்து 20,000 ஆகும்.
மானிக் சர்க்காரின் மனைவி பாஞ்சாலி பட்டாசார்யா மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெறும்போது அவருக்கு கிடைத்த பணத்தை வைத்து வைப்புத் தொகையில் ரூ.23 லட்சத்து 58 ஆயிரத்து 380 வைத்துள்ளார். மேலும் அவரிடம் ரூ.72,000 மதிப்புள்ள 20 கிராம் தங்கம் உள்ளது.
மானிக் சர்க்கார் மற்றும் அவரது மனைவியிடம் அசையும் சொத்துக்களே இல்லை. அவர்களின் அசையா சொத்து மற்றும் பண இருப்பு மொத்தம் ரூ. 24 லட்சத்து 52 ஆயிரத்து 395 ஆகும்.
வேட்புமனு தாக்கல் செய்தபோது மானிக்கின் மாத சம்பளம் ரூ.9,200. அதையும் அவர் அப்படியே கட்சியிடம் அளித்துவிடுவார். கட்சி அவருக்கு மாதாமாதம் ரூ.5,000 செலவுக்கு அளிக்கும்.
என்னுடைய பொருளாதார நிலை குறித்த செய்திகளை ரசித்து படிக்கிறேன். என்னை ஏழை முதல்வர் என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன். நான் எளிமையாக இருக்க கட்சி தான் காரணம் என்று அடக்கமாக தெரிவித்தார் மானிக் சர்க்கார்.
கார்போரேட்  முதலாளிகளும்  (முதலைகள்),கார்போரேட் ஊடகங்களும்  இவரை ஏற்று கொள்வார்களா ? 
                <நன்றி :- ஒன் இந்தியா 

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்





நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பொது துறை வங்கிகளை சீரழிக்கும் வங்கி  சீர்திருத்த மசோதாவை எதிர்த்தும் , புதிய ஊதிய உயர்வு உடன்பாட்டை உடனடியாக நிறைவேற்ற கோரியும்  நாளை (18-12-2013 )(புதன்கிழமை) தேசிய அளவிலான ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர் . இதில் நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பதாக ஐக்கிய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்து உள்ளது .இந்த நிலையில் ஐக்கிய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்து அந்த சங்க நிர்வாகிகளுடன் இந்திய வங்கி நிர்வாகம் கடந்த 14-ந்தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.இந்த நிலையில் மத்திய தொழிலாளர் துறை தலைமை கமிஷனர் பி.கே. சன்வரியா மற்றும் இந்திய வங்கி நிர்வாகத்தினர் நேற்று அனைத்து வங்கி துறையினருடன் நேற்று 2-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.இதைத்தொடர்ந்து வங்கி ஊழியர்களின் தேசிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி 18-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறும் என்றும் இதுகுறித்து ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்தார். முக்கிய தொழிற்சங்கம் அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளும் பங்கேற்பதால் நாடு முழுவதும் அன்றைய தினம் வங்கி சேவை கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது. பொது துறை வங்கிகளை பாதுகாக்க நடைபெறும் வங்கி வேலை நிறுத்தம் வெற்றி பெற பி எஸ் என் எல் திருநெல்வேலி மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல்  வாழ்த்துக்கள் 

GPF பட்டுவாடா .வங்கி கடன்



GPF பட்டுவாடா

கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக GPF பட்டுவாடா செய்வதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி நமது துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி அவர்கள் இன்று பொது மேலாளர் (BFCI ) அவர்களை சந்தித்து பேசிய போது கார்போரேட் நிர்வாகம் கடும் பண பற்றாகுறையை சந்தித்துள்ளதாகவும் போதிய நிதி இல்லை என்றும் GM  (BFCI ) அவர்கள் கூறியுள்ளார் . நமது துணை பொது செயலர் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக GPF பட்டுவாடா செய்ய வேண்டும் என கடுமையாக வலியுறுத்தி உள்ளார் .

வங்கி கடன்

யூனியன் வங்கி,கனரா வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்த புதுப்பித்தல் பிரச்சினையை இன்று நமது துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி அவர்கள் பொது மேலாளர் (BFCI) அவர்களுடன் விவாதித்தார்.நமது கார்போரேட் அலுவலகம் இது விசயமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் மேலும் இது தொடர்பாக வங்கிகள் நமது நிறுவனத்தை அணுகி வருகின்றன என்றும் பொது மேலாளர்   (BFCI) அவர்கள் கூறியுள்ளார்.

Monday 16 December 2013

15.12.2013 சிறப்பான கோவை பயிலரங்கம். . .


15.12.2013 சிறப்பான கோவை பயிலரங்கம். . .

அருமைத் தோழர்களே! 
மேடையில் தலைமைக்குழு தோழர்கள் 

தோழியர்.இந்திரா உரை நிகழ்த்தும் போது 

சிறப்பு அழைப்பாளர் தோழியர்.M.கிரிஜா உரை நிகழ்த்தும் போது 

நமது BSNLEU மாநில செயலர் தோழர்.S.செல்லப்பா உரை நிகழ்த்தும் போது 

பயிலரங்கத்தில் கலந்து கொண்ட பெண்களின் ஒரு பகுதி 
 நமது தமிழ் மாநில சங்க முடிவின்படி 15.12.2013 ஒருநாள் தமிழகம் தழுவிய  மகளீர் பயிலரங்கத்தை கோவையில் நமது BSNLEU மாவட்ட சங்கம் மிக சிறப்பாக நடத்தியது. காலையில் நடைபெற்ற முதல் அமர்விற்கு நமது BSNLEU சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தோழியர்.T. பிரேமா தலைமை தாங்கினார்.கோவை தோழியர்.பங்கச வள்ளி, வந்திருந்த தோழர்களை வரவேற்று உரை நிகழ்த்தினார்.BSNLWWCCகன்வீனர்,தோழியர்.V.P.இந்திரா நிகழ்ச்சி குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளர் தோழியர்.M.கிரிஜா -AIIEA,"சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள்"என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார்.
பின்பு மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நடைபெற்ற 2 வது அமர்விற்கு  தோழியர்.R.ராஜலெட்சுமி தலைமை தங்கினார்,நமது BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர்.எஸ்.செல்லப்பா "பொதுத்துறைகள் சந்திக்கும் சவால்கள் "என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார்.
தமிழகம் முழுவதுக்குமான பெண்கள் பயிலரங்கத்தில் 60 பெண்களும்,25 ஆண்களும் பங்கெடுத்தனர்.நமது மாவட்டத்திற்கு மாநில சங்க ஒதுக்கீட்டின் அடிப்படையில். கோவை பெண்கள் பயிலரங்கத்திற்கு நமது நெல்லை  மாவட்டத் திலிருந்து,தோழியர்கள் சித்தாலஷ்மி. தங்கம் ஆகியோர் கலந்து கோண்டனர்   ,கோவை BSNLEU  மாவட்ட சங்கத்திற்கு,திருநெல்வேலி  BSNLEU மாவட்ட  சங்கத்தின் மணமார்ந்த  பாராட்டுக்கள்.

TNTCW மாநில செயற்குழு சுற்றறிக்கை

Sunday 15 December 2013

லோக்கல் கவுன்சில் ஊழியர் தரப்பு கூட்டம்



அன்பார்ந்த தோழர்களே !
     நெல்லை மாவட்ட தலமட்ட கூட்டு ஆலோசனைக்குழுவின் கூட்டதிற்கான ஆய்படு பொருளை இறுதி செய்வதற்கு ஊழியர் தரப்பு கூட்டம் 17.12.2013 அன்று  காலை 10.30 மணிக்குGOM விலுள்ள BSNLEU  அலுவலகத்தி வைது PRE-LJCM(Staff
Sde)  கூட்டம்
 தலமட்டக்குழுத் தலைவர் தோழர்
N.கணேசன்(NFTE) தலைமையில்      நடைபெறவுள்ளது. அனைத்து LJCM ஊழியர் தரப்பு உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். வரும்போது தங்கள் பகுதியில் இருக்கும் பிரச்சினைகளை தொகுத்து கொண்டுவருமாறு வேண்டுகிறோம். அனைத்து உறுப்பினர்களும் "ON DUTY" யாக கருதப்படுவர். தலமட்ட அதிகாரிகளுக்கு நமது மாவட்ட நிர்வாகத்திடமிருந்து வழிகாட்டுதல் அனுப்பப்பட்டுள்ளது.
...என்றும் தோழமையுள்ள,
                    C.சுவாமிகுருநாதன்(BSNLEU)
                               செயலர் ,தலமட்டக்குழு          

                      திருநெல்வேலி மாவட்டம்

நெல்சன் மண்டேலா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்




தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும், நிறவெறிக்கு எதிராகப் போராடிய தலைவருமான நெல்சன் மண்டேலாவின் உடல் அவரது சொந்த கிராமமான குனுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வயது முதுமையால் ஏற்பட்ட தளர்ச்சி மற்றும் உடலநலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மண்டேலா (95) கடந்த 5-ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் காலமானார். 10 நாள்களாக துக்கம் கடைபிடிக்கப்பட்டு இன்று இறுதிச்சடங்கு நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சி தனிப்பட்டது என்பதால் அதில் மண்டேலாவின் மனைவி கிரகா மஷேல், முன்னாள் மனைவி வின்னி மடிகிசேலா மண்டேலா உள்ளிட்ட 450 பேர் பங்கேற்றனர்.
அரசு சார்பிலான இறுதிச்சடங்கு ஏற்பாடு இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்கியது. அவரது வயதை பிரதிபலிக்கும் வகையில் 95 மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. அப்போது நடைபெற்ற 2 மணி நேர பொதுச்சடங்கில் அழைப்பின்பேரில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், இளவரசர் சார்லஸ், ஈரான் துணை அதிபர், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் அதிபர்கள் உள்ளிட்ட 4500 விருந்தினர்கள் வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா, 95 ஆண்டுக்கு முன் தொடங்கிய இவரது தனித்துவமிக்க பயணம் இன்றுடன் முடிகிறது என வர்ணித்தார்.