Sunday 31 December 2017




Image result for new year 2018 images

02.01.2018 முதல் இரண்டு மாநில சங்க நிர்வாகிகளும் காலவரையற்ற உண்ணாவிரதம்



ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்திட 02.01.2018 முதல் இரண்டு மாநில சங்க நிர்வாகிகளும் காலவரையற்ற உண்ணாவிரதம்
தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் (நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதம்முதல்) வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க கோரி தமிழகத்தில் BSNL ஊழியர் சங்கமும் தமிழ்நாடு தொலைதொடர்புஒப்பந்த தொழிலாளர் சங்கமும் இணைந்து 22.12.2017 மாலை நேர தர்ணாவையும், 27.12.2017 மாலை முதல் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும், மாநில தலைமை பொதுமேலாளர் அலுவலகம்முன்பும் காத்திருப்பு போராட்டங்களையும் நடத்தின. 28.12.2017 அன்று மாநில தலைமை பொதுமேலாளர் அழைத்து மாநில நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகளை கூறி விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இதற்கு இடையே நமது மாநில சங்கங்கள் சென்னையில் உள்ள Dy.CLC(C) அவர்களை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். அப்போது அவரும் இதில் தலையிட்டு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். இந்த சூழ்நிலையில் TNTCWU மாநில சங்கத்திடம் கலந்தாலோசித்து BSNLEU வின் மாநில செயலகம் கூடி இந்த போராட்டத்தை தற்போது விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 01.01.2018க்குள் ஊதியம் வழங்கப்படவில்லை எனில் 02.01.2018 முதல் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் மற்றும் TNTCWU ஆகிய சங்கங்களின் மாநில சங்க நிர்வாகிகள் சென்னை தமிழ் மாநில தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமை பொது மேலாளரை சந்தித்து இந்த முடிவுகளை தெரிவித்ததுடன் போராட்டத்தில் பங்கேற்ற ஒப்பந்த ஊழியர்கள் மீது தல மட்டங்களில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை தலைமை பொதுமேலாளர் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த போராட்டங்களில் கலந்துக் கொண்ட அனைத்து ஒப்பந்த மற்றும் நிரந்தர ஊழியர்களுக்கும் தமிழ் மாநில சங்கங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 02.01.2018 முதல் நடைபெற உள்ள போராட்டத்தில் இரண்டு மாநில சங்க நிர்வாகிகளும் கலந்துக்கொள்ள உடனடியாக ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். ஒன்று படுவோம். போராடுவோம். வெற்றி பெறுவோம்.

Friday 22 December 2017

3 வது நாள் தர்ணாபோராட்டம்

தமிழகம் முழுவதும் பரவலாக பல மாவட்டங்களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் இன்னமும் வழங்கப்படவில்லை. ஒப்பந்ததாரர்கள் BSNL நிர்வாகம் தங்களுக்கு பணம் வழங்கவில்லை என்று கூறுகிறார்கள். நமது மத்திய சங்கம் கார்ப்பரேட் அலுவலகத்தில் இதற்கான நிதி ஒதுக்கித் தர வற்புறுத்தியுள்ளது. விரைவில் நிதி வழங்கப்படும் என கார்ப்பரேட் அலுவலகம் உறுதியளித்துள்ளது. ஆனாலும் கடுமையான காலதாமதம் ஆவதால் உடனடியாக ஒப்பந்த ஊழியருக்கு ஊதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும், தமிழ்நாடு












தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும் 22.12.2017 அன்று மாவட்ட தலைநகர்களில் மாலை நேர தர்ணா நடத்திட அறைகூவல் விட்டுள்ளன. அதப் அடிப்படையில்
திருநெல்வேலியில் இருமாவட்ட சங்கங்கள் இணைந்து
22-12-2017 அன்று GMஅலுவலகத்தில்

மதியம் 2.00 மணிக்கு மாலை நேர தர்ணாபோராட்டம் நடைபெறது

Tuesday 5 December 2017

அன்னல் டாக்டர் அம்பேத்கர் நினைவை போற்றுவோம்



விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும்,  வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.

பிறப்பு: ஏப்ரல் 14, 1891

இடம்: மாவ், உத்தரபிரதேச மாநிலம், (இப்போதுமத்தியபிரதேசத்தில் உள்ளது), பிரிட்டிஷ் இந்தியா

பணி: இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவுகுழுவின் தலைவர்

இறப்பு: டிசம்பர் 6
,  1956


05/12/2017 வேலை நிறுத்த தயாரிப்புக் கூட்டம்.