Saturday 23 April 2016

NFTE க்கு நெற்றியடி







Read | Download

NFTE க்கு நெற்றியடி
சாட்டையடியும் சாணிப்பாலும் செங்கொடிக்குப் புதிதல்ல! ஊழியருக்குத் துரோகம் செய்யும் நிர்வாகத்தை எதிர்த்துப் போராடுவது தான் உண்மையான தொழிற்சங்கம்! அதுதான் பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம்! அதற்கு நிர்வாகம் சாட்டையடி கொடுக்கிறது என்றால், சங்கம் சரியாகச் செயல்படுகிறது என்பது கூடப் புரியாமல் புலம்புகிறது ஒரு சமரச சங்கம்! ஊழியருக்கு எதுநடந்தாலும் “ஆமாம் சாமி” போட்டால் சாட்டையடி தராமல் “தலைவர்களுக்குச் சலுகைகள்“ தருவார்கள்! அது எமக்குத் தேவையல்ல என்று ஊழியர் நலனை முன்னிறுத்தி, தொடர்ந்து போராடுகிறது எமதுசங்கம்! நியாயம் கேட்கும் சங்கத்திற்கு நிர்வாகம் சாட்டையடி! ஆமாம் சாமி சங்கத்திற்கு நிர்வாகம் சலுகை, பாராட்டு! அப்ப சரியாத் தானே இருக்கு? தொடர்ந்து போராடுவோம்! ஊழியர் நலனுக்காக சாட்டையடியை வீரத் தழும்புகளாக ஏற்போம்! சாட்டையடியும் சாணிப்பாலும் எங்கள் முன்னோர்கள் எதிர்கொண்டதுதான்! இப்போதும் தொடரும் போராட்டத்தில் இணையட்டும் ஊழியர் ஆதரவு! வாக்களிப்பீர் BSNLEU. கூட்டணிக்கே! (நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள், திரு A.M.குப்தா (GM SR), கார்பரேட் அலுவலகம், புது டெல்லி அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் இணைக்கப்பட்டுள்ளது.)





Read | Download

வேண்டுகோள்!
BSNL ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள்! - தமிழ் மாநில சங்கத்தின் நோட்டீஸ்

ஊதிய மாற்றம்








Read | Download

ஊதிய மாற்றம்
ஊதிய மாற்றம் -நேற்று(2002) - இன்று(2007)-நாளை (2017)- தமிழ் மாநில சங்க நோட்டீஸ்.


நெற்றியடி




 நெற்றியடி





BSNL  நிர்வாகத்தின்  06 04 2016  தேதியிட்ட கடிதத்திற்கு

BSNL ஊழியர்  சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் P. அபிமன்யுவின் 

நெற்றியடி பதில்

1.            முதன்மை அங்கீகார பிரதிநிதித்துவ சங்கமான BSNL ஊழியர் சங்கம், தொழிலமைதி குலைவதற்கான நிலைமையை உருவாக்கியது போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குகின்ற வகையில் BSNL   நிர்வாகத்தின் கடிதம் உள்ளது என்பது, மிகவும் துரதிருஷ்டமானது. 

2.            இது முற்றிலும் உண்மைகளுக்கு புறம்பானதாகும். 

3.            தற்போது சுமுகமற்ற சூழல் உருவாக்கப்பட்டது வேறு யாராலுமல்ல ;  BSNL நிர்வாகத்தால்தான் என்பதுதான் உண்மை.

4.            ஒரே ஒரு நாள் முன்பாக தகவலளித்துத்தான் இக்கூட்டம் கூட்டப் பட்டது என்பதே உண்மை.  இது போன்ற நிகழ்ச்சிகள் இதற்கு முன்பு நடந்ததேயில்லை.

5.            BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத தனது நிலையைத் தெரிவித்த பின்னரும், 30.3.2016 அன்று,  BSNL நிர்வாகத்தால் கூட்டம் நடத்தப் பட்டுள்ளது. 
.
6.            BSNL நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, அநீதியானதும் ஒழுங்கு விதிகளை மீறுவதுமாகும்.

7.            ஒரே ஒரு நாள் முன்பாக தகவலை அளித்து PLI குழு கூட்டம் அவசரமாக ஏன் நடத்தப் பட்டது என்பது குறித்து ஒட்டு மொத்த ஊழியர்களுக்கும் BSNL நிர்வாகம் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது. 

8.            மிக மிகக் குறுகிய இந்த கால அவகாசத்தில், குழுவின் கூட்டத்தை நடத்தியதன் மூலம், BSNL  நிர்வாகம், யாரை மகிழ்விக்க விரும்பியது ?

9.            BSNL  நிறுவனம், ஒரு தனியார் நிறுவனமல்ல.

10.          அது இந்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனம் என்பதை நிர்வாகத்துக்கு நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம்.  எனவே, அதற்கான விதிமுறைகளும், வடிவங்களும் கடைப்பிடிக்கப் பட வேண்டும்.

11.          30.3.2016 அன்று நடைபெற்ற கூட்டத்தில் BSNL ஊழியர் சங்கம் கலந்து கொள்ளாமல் இருந்தும், நிர்வாகம் அளிக்க முன்வந்த PLI தொகையைக் குறித்து BSNL ஊழியர் சங்கம் எவ்வாறு அறிந்து கொள்ள முடிந்தது என்று மேற்கண்ட கடிதத்தில் கேட்கப் பட்டுள்ளது.

12.          PLI – ஆக ஓர் இரண்டு இலக்க தொகையை அளிக்க விரும்புவதாக CMD BSNL அவர்கள், BSNL ஊழியர் சங்கத்திடம் பல முறை தெரிவித்துள்ளார்

13.          BSNL ஊழியர் சங்கம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

14.          அது மட்டுமல்ல, 29.3.2016 அன்று, BSNL ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள், CMD BSNL – அவர்களைச் சந்தித்த போது கூட, ஒரு பவுண்டுக்கு ( இந்திய மதிப்பு : ரூபாய் 96-00 )  இணையான தொகையை PLI – ஆக அளிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். 

15.          BSNL ஊழியர் சங்கம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. 

16.          ஆனாலும், முதன்மை அங்கீகாரச் சங்கத்தைப் புறக்கணித்து விட்டு, NFTE சங்கம் அந்தத் தொகையை ஏற்றுக் கொண்டதால், நிர்வாகம் அவசர அவசரமாக குழுவின் கூட்டத்தைக் கூட்டியது துரதிருஷ்டவசமானது

17.          எங்களது கடிதத்தில், CMD BSNL - அவர்களுக்கும், NFTE சங்கத்துக்கும் ஒரு ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது என்று நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்.

18.          எங்களது கடிதத்தில் எழுதப் பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

19.          ’ரகசிய உடன்படிக்கைஎன்ற சொற்றொடர் அவை மரபை மீறிய சொற்றொடரல்ல.

20.          BSNL ஊழியர்கள் மீது ஓர் அற்பத் தொகையை திணிப்பதற்காக ஒரு புரிதலை CMD BSNL - அவர்களும், NFTE சங்கமும் ஏற்படுத்திக் கொண்டதன் பிறகே 30.3.2016 அன்று PLI–குழுவின் கூட்டம் நடைபெற்றுள்ளது என்பதை நாங்கள் இப்போதும் உறுதிபட கூறுகிறோம்.

21.          ஊழியர்களின் முதன்மை அங்கீகாரச் சங்கம் என்ற முறையில்இதற்கு எங்கள் எதிர்ப்பினைத் தெரிவிப்பதற்கும்கூடவே, ஊழியர்களுக்கு நியாயமான .  PLI வழங்க வேண்டும் என கோருவதற்கும் எங்களுக்கு அனைத்து நியாயங்களும் உள்ளன. 

22.          BSNL ஊழியர் சங்கம் ஒரு பொறுப்புள்ள தொழிற்சங்கமாகும்.


கப் சிப்………


இந்தக் கடிதத்திற்குப்பிறகு  BSNL நிர்வாகத்திடமிருந்து பதில் எதுவும் இல்லை. வாயை மூடிக் கொண்டு விட்டது. ஆனால் ஜல்ரா  NFTE சங்கம் மட்டும்  BSNL நிர்வாகத்தின் கடிததை  தூக்கி பிடித்துக் கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்றது. நமது பதிலையும் வெளியிடுவார்களா அல்லது நிர்வாகத்தின் செம்பு தூக்கியாகவே இருக்கப்



Friday 22 April 2016

கோயபல்ஸ் பிரச்சாரம்





கோயபல்ஸ் கூட்டம் திருந்த வேண்டும்







ஒளிர்மயமானதுநமதுவாழ்வு








ஒளிர்மயமானதுநமதுவாழ்வு

கைநிறையகாசுஎன்றுஆரம்பித்துபைநிறையபணம்
12 ஆண்டுகளில் 5 மடங்குபெருகியதுசம்பளம்
கூடுதல்சம்பளத்துடன்பதவிஉயர்வுகிடைக்குமாஎன்று
ஏங்கியநிலைமாறிஎல்லோரும்இரண்டுவாங்கியபின்பு
இன்னும்இரண்டுகாத்திருக்கும்இன்பநிலை
ஆனந்தமானஅலுவலகப்பணி ..அனைத்துவிதசலுகைகள்
கௌரவமானவாழ்க்கைநிலை
அனைத்தையும்போராடி,வாதாடி
பெற்றுத்தந்தஎங்கள் BSNLEU
மேலும்முன்னேற்றத்திற்குஉறுதிகூறும்BSNLEU
BSNLEUயின்வெற்றிஎங்கள்வாழ்வின்வெற்றி
BSNLEU வெற்றிபெறசபதம்ஏற்கின்றோம் !


Monday 18 April 2016

Splendid election campaign meeting at Tirunelveli. CHQ NEWS







Splendid election campaign meeting at Tirunelveli.
A splendid election campaign meeting was held at Tirunelveli on 13.04.2016. It was held in the GM office premises. Apart from the comrades of Tirunelveli, a large number of comrades attended the meeting from the districts of Tuticorin, Nagercoil and Virudhunagar. Members of SEWA BSNL were present in the meeting in good strength. Com. Swamigurunathan, district president, presided over the meeting. Com. Soosai, district secretary welcomed all the comrades. Com.C.Palanisamy, AGS, BSNLCCWF, com. P.Indira, ACS, BSNLEU, com. K. Rajendiran, DS, SEWA BSNL, com. P. Jagdeesh Selvakani, Ex ACS, SEWA BSNL, com. P. Murugan, Ex Circle Executive Member, SEWA BSNL, com. Jayamurugan, DS,BSNLEU,Tuticorin, com. George, DS, Nagercoil and com. Samuthirakani, DP, Virudhunagar were present on the dias.  Com. P. Abhimanyu, GS, com. S. Chellappa, AGS and com Babu Radhakrishnan, CS addressed the meeting. The General Secretary spoke in detail about the achievements of BSNLEU with regards to the revival of BSNL and the settlement of the issues of the Non-Executives. Especially, he exposed the hollow claims of NFTE in the matter of PLI. Babu Tarapada told that workers are not beggars, but NFTE leaders tried to make the BSNL employees beggars, by accepting the 2 digit PLI, which was already rejected by BSNLEU, said the GS. He appealed to the employees to massively vote for BSNLEU.<<<views of the meeting>>> 

Wednesday 13 April 2016

அம்பேத்கர் பிறந்த தினம்



அம்பேத்கர் பிறந்த தினம்




சாதிமறுப்பு திருமணங்கள்
ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரை வேறொரு கிரகத்தில் வந்தவர்கள் போல பிரித்து பார்க்கும் மனநிலையை உடைக்கும் சக்தி அதிகபட்சமாக சாதிமறுப்பு திருமணங்களுக்கு உண்டு. உதிரம் கலந்து ஒருவருக்கொருவர் உறவுகளாகும் பட்சத்தில் சாதி உணர்வு குறையும் வாய்ப்பு இருக்கிறது.
அம்பேத்கரின் ‘The annihilation of caste’ புத்தகத்தில் இருந்து ........... 











தமிழ் புத்தாண்டு தமிழ் வாழ்த்து ...

எழுச்சியுடன் நடைபெற்ற திருநெல்வேலி தேர்தல் சிறப்புக் கூட்டம்




எழுச்சியுடன் நடைபெற்ற திருநெல்வேலி தேர்தல் சிறப்புக் கூட்டம்
7வது சங்க அங்கீகாரத் தேர்தல் சிறப்புக் கூட்டம்  நெல்லையில

       BSNLEU தேர்தல் சிறப்புக் கூட்டம் நெல்லையில் இன்று 13-04-2016 மாலை 0400 மணி அளவில் நெல்லை GM அலுவலகத்தில் தோழர். C. சுவாமிகுருநாதன் தலைமையில் துவங்கியது. மாவட்டச் செயலர் தோழர்.K. சூசை மரிய அந்தோணி வரவேற்றார்.

மாநிலச் செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், அனைத்திந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர். S. செல்லப்பா எழுச்சியுரை ஆற்றினர். பிரமாண்டமான கூட்டத்தின் சிறப்புரையாக தோழர் P. அபிமன்யூ உரையாற்றினார்.