Saturday 4 April 2015

எங்களுக்கும் நா தழுதழுக்கிறது பிரதமரே! . . .





ரிசர்வ் வங்கியின் 80 வது ஆண்டு விழாவில்” இன்னும் புகைமண்ட விறகு வைத்து அடுப்பெரிக்கும் பெண்களை குறிப்பிட்டு பிரதமர்மோடி பேசியபோது நா தழுதழுத்து விட்டதாம். (இந்து ஆங்கில நாளிதழ் -03.04.2015) சமையல் எரிவாயு மானியத்தை தானாகவேமற்றவர்கள் நிராகரித்தால் ஏழைக் குடிசைகளின் நிலைமைகளை தலைகீழாக மாற்றிவிடலாம் என்று கூறியுள்ளார். “நான் ஏழையாகவளர்ந்தவன் , அதனால் அதன் வலி எனக்குத் தெரியும்” என்பதே பஞ்ச் டயலாக்.இதுவரை பிரதமரின் வேண்டுகோளை ஏற்று 2,80,000பேர் மானியம் வேண்டாமென்று ஒப்புதல் அளித்துள்ளார்கள்.இதனால் ரூ.100 கோடி மிச்சமாகியுள்ளதாம்இப்படி பிச்சை எடுக்காதகுறையாக பிரதமர் ஏழைகளுக்காக “மன்றாடுகிறார்” என்பது போல ஊடகங்களின் செய்திகள் உள்ளன.ஆனால் இது “கார்ப்பரேட்சாமிகளுக்காக” எடுக்கிற நேர்த்திக்கடன் பிச்சைதான்ஒரு கணக்கைப் பாருங்கள். 2015 மார்ச் வரை கார்ப்பரேட் வரிவிகிதம் 30சதவீதம்மோடியின் பட்ஜெட்டில் ரூ.3,93,677 கோடிகள் வசூலாகியுள்ளது என கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளதுஉண்மையில்அவர்களின் வருமானத்தில் இது 23 சதவீதம்தான். 7 சதவீதம் வரிச் சலுகைகளில் போய்விட்டது.சலுகைகள் இல்லாமல் வசூலாகிஇருந்தால் ரூ. 5,13, 491 கோடிகள் வசூலாகி யிருக்கலாம்.எவ்வளவு பள்ளம் பாருங்கள்ரூ.1,19,814 கோடிகள்நிறைய நடுத்தர வர்க்கவீடுகளைத் தட்டிக்கிடைக்கிற சில 100 கோடிகளே ஏழைகளின் வாழ்க்கையை மாற்றிவிடும் என்றால் டாட்டாவின்பிர்லாவின்,அம்பானியின் கதவுகளைத் தட்டினால் கிடைக்கும் லட்சம் கோடிகள் எவ்வளவு பெரிய மாற்றத்தைத் தரும் !உங்களை மாதிரி 11லட்சம் ரூபாய்க்கு கோட்டு சூட்டு முடியாவிட்டாலும் மேனியை மறைக்கிற துணிக்கு பஞ்சம் இருக்காதேஇன்னொரு செய்திபாருங்கள்வரி பாக்கி வழக்குகளில் நிலுவையாக உள்ள தொகையே ரூ. 1 லட்சம் கோடிகளுக்கு மேல் இருப்பதாக சி..ஜி அறிக்கைகூறுகிறதுடாட்டா குழுமம் தனதுஊழியர்களுக்கு மானியத்தை தானாக கைவிட்டு தேச நிர்மாணத்திற்கு உதவுமாறு சுற்றறிக்கைவிடுத்துள்ளதாம்.
 இப்படிப் போகிறது கதை.
2015 -  பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி விகிதத்தை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகஅடுத்த 4 ஆண்டுகளில் குறைக்கப் போவதாகவும் மோடி அரசு அறிவித்துள்ளது. “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலேஎன நினைக்கும்போது எங்களுக்கும் நா தழு தழுக்கிறது பிரதமர் மோடி அவர்களே ! 
காந்திக்கு ஒரு டயலாக் 

ஏழைக்கு ஒன்று... காந்திக்கு ஒன்று... என்று பிரதம ரின் பஞ்ச் டயலாக்குகள் ரிசர்வ் வங்கி 80 வது ஆண்டு விழாவில்தூள்பறந்திருக்கின்றனரூபாய் நோட்டில் காந்தி இருக்கிறாராம்..ஆனால் அது அச்சாவது ஜெர்மனி
ஜப்பான்
பிரிட்டன் காகிதங்களிலாம்.இங்க்கும் அந்நியமாம்சுதேசி பேசிய
 காந்திக்கே இந்த நிலைமையா! ‘மேக் இன் இந்தியா’ ரிசர்வ் வங்கியிலிருந்து துவங்க வேண்டும்என்று அறிவுரை கூறியுள்ளார்.ஒவ்வோர் ஆண்டும் 2000 கோடி கரன்சி நோட்டுகளை இந்தியா அச்சிடுகிறதாம்இதற்கானசெலவுகளில் 40 சதவீதம் அந்நியநாடுகளுக்குத்தான் பேப்பருக்காகஇங்க்குக்காகப் போகிறதாம்.இது சுதந்திரம் பெற்ற காலத்தில்இருந்து இருக்கிற பிரச்சனைமோடிபேசியவுடன் பரவாயில்லையே என்று மனதில் படுமல்லவாஆனால் அடுத்துப் பேசிய ரிசர்வ்வங்கி துணை கவர்னர் முந்த்ரா இன்னும் ஓரிரு மாதங்களில் முன்னேற்றம் கண்டுவிடுவோம் என்று வாக்குறுதி தந்தார் என்றுபடித்தவுடன்தான் வந்தது சந்தேகம்இணையத்தில் போய் பழைய இதழ்களை தேடிப் பார்த்தால் கிடைத்தது விடை .இது மோடியின்மூளையில் உதித்த திட்டமல்ல
டைம்ஸ் ஆப் இந்தியா பிப்ரவரி 12, 2013 இதழிலேயே நாசிக்கில் உள்ள செக்யூரிட்டி பிரஸ் மற்றும்பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரான் லிமிடெட் இணைந்து 50:50 இணைவினையில் மைசூரில் ஒரு காகிதத் தயாரிப்பு மில்லைதிறப்பதெனவும்இறக்குமதி சார்பைக்குறைப்பதெனவும் செய்தி உள்ளதுமோடி பதவிக்கு வருவதற்கு ஒண்ணே கால் வருசத்துக்குமுன்பாக எடுத்த முடிவுடிசம்பர் 2014 ல் இது நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டுள்ளது அதுதாமதமாகியுள்ளதுஅதனால்தான் மோடிஅறிவித்த மாத்திரத்தில் சில மாதங்களில் நடைமுறைக்கு வந்து விடும் என்று வங்கியின்துணை கவர்னரால் அறிவிக்க முடிகிறதுஇன்சூரன்ஸ்பாதுகாப்புரயில்வே என அந்நிய
 முதலீட்டைவரவேற்கும் போதெல்லாம்வராத காந்தியின் ஞாபகம் இப்போது வருவது நோகாமல் நொங்கு தின்கிற சாமர்த்தியம்தான்..--K.சாமிநாதன், AIIEA


No comments:

Post a Comment