Tuesday 29 April 2014

மே தினம்

மே தினம் - வரலாற்று நிகழ்வு

அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ போராளிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக, உழைப்பாளர்களின் தினமாக நம் முன் நிற்கிறது. இப்படியாக, பொதுவுடைமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டி வரும் அமெரிக்காவில்தான் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை முதன் முதலில் நிலைநாட்டப்பட்டது என்பது வரலாறு காட்டும் பாடம் ஆகும். எங்கு அழுத்தம் அதிகமாகிறதோ அங்கு நிச்சயம் புரட்சி வெடித்துக் கிளம்பும்.

பெற்ற சுதந்திரம் பறி போகிறது !

நேற்று வரை நம் முன்னோர்களின் தியாகத்தால் நாம் பெற்ற இந்த 8 மணி வேலை என்ற சுதந்திரம் , இப்போது ஏகாதிபத்திய அரசுகளால், முதலாளித்துவ சக்திகளால், பன்னாட்டு நிறுவனங்களால், நம்மை அடகு வைக்கும் ஆளும் நாலாந்தர அரசியல் வாதிகளால் படிப்படியாகப் பறிக்கப் படுகிறது. 10 மணி நேரம் , 12 மணி நேரம் நீ வேலை செய்தால் என்ன என்று நம்மிடமே கொடூர எண்ணம் கொண்ட அதிகாரிகளால் இன்று தைரியமாக கேட்கப் படுகிறது . மீண்டும் அடிமைச் சாசனம் எழுதப் படுகிறது.

மீண்டும் புரட்சிக்கு தயாராவீர் !

இதிலிருந்து நாம் மீள வேண்டுமானால் , பெற்ற சுதந்திரம் பறிபோகாமல் காக்கப் படுமானால் என்ன தியாகத்திற்கும் நாம் தயாராக வேண்டும். தொழிற் சங்கம் என்ன செய்தது என்று கேட்பதை விட்டு , நாம் என்ன செய்ய வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு தோழனிடமும் வெடித்துக் கிளம்ப வேண்டும். அதிகார மிரட்டலுக்கு அடி பணியாது , தண்டனை களுக்கு பயந்து ஓடாது , போராட்ட குணம் வளர்க்கப் பட வேண்டும். தொழிலாளர் சக்தி அற்ப எண்ணங்களுக்காக பிரிக்கப்படாமல் , ஒன்று படுத்தப் படவேண்டும். மீண்டும் வரலாற்றுப் போருக்கு இளைஞர்களை நாம் தயார் செய்திட வேண்டும் . இதுவே மே தின தியாகிகளுக்கு நாம் செய்திடும் உண்மையான அஞ்சலி ஆகும்.

மே தின தியாகிகள் நினைவு ஓங்கட்டும் !
புரட்சிக்கான சிந்தனை பெருகட்டும்!


தோழனுக்கு ஒரு வாழ்த்து!

Monday 28 April 2014

30.04.2014 அன்று பணி ஒய்வு பெறும் அனைத்து தோழர்கலுக்கும் தோழமை வாழ்த்துக்கள்

30.04.2014 அன்று பணி ஒய்வு பெறும் அனைத்து தோழர்கலுக்கும்  தோழமை வாழ்த்துக்கள்


30.04.2014 அன்று பணி ஒய்வு பெறும் அனைத்து அதிகாரிகள்/ஊழியர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்
தோழமையுடன்
C.சுவாமிகுருநாதன் 
மாவட்ட செயலர்


மாநிலச் சங்க சுற்றறிக்கைகள்

மாநிலச் சங்க சுற்றறிக்கைகள்



30ஆவது தேசிய கவுன்சில் கூட்டம் - சுற்றறிக்கை எண்:127
Read | Download



துணை டவர் நிறுவனமும் இதர மத்திய சங்க செய்திகளும்- சுற்றறிக்கை எண்:126Read | Download





கோவை கருத்தரங்கம்- சுற்றறிக்கை எண்:125
Read | Download

Tuesday 22 April 2014

டவர் துணை நிறுவனம்




          நமது நிறுவனத்தில் உள்ள டவர்களை நிர்வகிக்க ஒரு துணை நிறுவனம் உருவாக்குவது என்பதற்கான குறிப்பை நிர்வாகம் இன்று (21-04-14) சங்கங்களிடம் வழங்கியது.துணை நிறுவனம் உருவாக்குவதற்கான காரணத்தை நிர்வாகம் பின்வருமாறு கூறியுள்ளது.


(i)பிஎஸ்என்எல்நிறுவனத்தில் 60,000க்கும் மேற்பட்ட டவர்கள் உள்ளன. ஆனால் அந்த டவர்களில் இருந்து போதிய வருவாய் கிடைக்கவில்லை.


(ii) டவர்களில் இருந்து மேலும் வருவாய் ஈட்டுவதற்காக , துணை நிறுவனம் அமைக்கநிர்வாகம் முடிவு செய்துள்ளது.
(iii)துணை நிறுவனம் உருவாக்குவதற்கான நோக்கத்திற்காக ஆலோசக நிறுவனமாக KPMG என்ற அமைப்பு பிஎஸ்என்எல் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டு அது தன் அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது.

(iv)பிஎஸ்என்எல் வாரியம் துணை நிறுவனம் அமைக்க ஏற்கனவே அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி விட்டது. தற்போது அது அமைச்சர்கள் குழு முன் உள்ளது.

( V ) துணை நிறுவனம் உருவாக்கபட்டபின்  ஒரு மூலதன மற்றும்  தொழில்நுட்ப   பார்ட்டனராக ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ப்பது.

          நிர்வாகத்தின் குறிப்பை படித்தபின் அனைத்து தொழிற் சங்கங்களும் சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சை போக்கில் பிஎஸ்என்எல்வாரியம் துணை நிறுவனம் அமைக்க ஒப்புதல் கொடுத்ததை வன்மையாக ஆட்சேபனை செய்துள்ளன. மேலும் ஒரு மூலதன மற்றும்  தொழில்நுட்ப பார்ட்டனராக ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ப்பது  என்பது பின்னாளில் பங்குகளை விற்று தனியார் மயமாக்கும் முயற்சியே என்று கடுமையாக எதிர்த்து உள்ளன.
          இன்றைய கூட்டத்தில்  நமது BSNLEU  சங்கம் சார்பாக தோழர் P  அபிமன்யூ, GS, தோழர்  V.A.N.நம்பூதிரி, தலைவர், தோழர் அனிமேஷ்  மித்ரா, Dy.GS. மற்றும் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி, ஏ.ஜி.எஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மற்ற சங்கங்களின் மற்றும்  அசோசியேசன்ஸ்  தலைவர்களும் ஒரு நல்ல எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.


Monday 21 April 2014

திறந்த வெளி கருத்தரங்க

திறந்த வெளி கருத்தரங்கம்

   தமிழ் மாநில சங்கம் சார்பாக ராஜ்கோட் மத்திய செயற்குழுவில் எடுத்த முடிவின்படி திறந்த வெளி கருத்தரங்கம் மாநில தலைவர் தோழர் K.மாரிமுத்துதலைமையில் கோவை மத்திய தொலைபேசி நிலைய வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் கோவை மாவட்ட செயலர் தோழர் ராஜேந்திரன் வரவேற்று உரை ஆற்றினார். மத்திய தொழிற்சங்கங்களின் 10 அம்ச கோரிக்கைகளும், அதற்கான போராட்டங்களும் என்ற தலைப்பில் உரையாற்றியநமது மாநில செயலர் தோழர் S செல்லப்பா அவர்கள் தன் உரையில்பொதுத்துறை உருவான வரலாற்றையும்,பொதுத்துறை நிறுவனங்கள் தன்  லாபத்தில் அரசுக்கு அளித்த மிக பெரிய பங்களிப்பையும் சுட்டி காட்டினார். உலகமயமாக்கல் ,தனியர்மயமாக்கல் கொள்கையை அமல்படுத்தும் தற்போது உள்ள காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும்  அதற்கு முந்திய  பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி  அரசும்  பொது துறையை சீரழிக்கும் கொள்கையை கடைபிடிப்பதையும் அதை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் 1991 முதல் இதுவரை நடத்திய 16 வேலை  நிறுத்த போராட்டங்களிலும் நமது BSNLEU சங்கம் பங்கேற்றதின் விளைவாகத்தான் இன்று வரை 1% பங்குகள்கூட விற்கப்படாமல் நமது BSNL நிறுவனம்  காக்கக்பட்டு உள்ளதை நினைவூட்டினார். மேலும் ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியமாக  ரூபாய் 10,000/- வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் 10 அம்ச கோரிக்கையில் உள்ளதை சுட்டி காட்டினார். மத நல்லிணக்கமும் தொழிலாளி வர்க்க கடமையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர்  தோழர் P சம்பத் தன் உரையில் இந்தியாவின் பிரிவினைக்கு காரணமான மதவாத சக்திகளின் போக்கை வரலாற்று சான்றுகளுடன் சுட்டி காட்டினார். தேச தந்தை மகாத்மாவின் படுகொலைக்கு காரணமான மதவாத சக்திகள் மீண்டு எழுவது தேச நலனுக்கு  மிக ஆபத்து என்பதையும்,  இந்தியாவில் மதவாத சக்திகளுக்கு எதிராக உறுதியாக போராடக்  கூடிய ஒரே அமைப்பு இடதுசாரிகள் மட்டுமே என்பதை அவர் ஆணித்தரமாக கூறினார்பாபரி மசூதி தாக்கபட்ட நேரத்தில் இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்களில் மட்டுமே  சிறுபான்மை இனத்தவர் மீது தாக்குதல் நடைபெற வில்லை என்பதை அவர் கூறினார். அதன்பின் தாராள மயமாக்கல் கொள்கையும், தொலை தொடர்பு கொள்கையும் என்ற தலைப்பில் உரையாற்றிய நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் தாராளமய கொள்கையால், பொதுதுறை நிறுவனங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதையும், இக்கொள்கையால் அரசு துறையில்  ஊழல் புரையேடி போகும் அவலத்தையும் சுட்டி காட்டினார். கடந்த 2014 பிப்ரவரி மாதம் முதல் 30,000 கோடி ரூபாய் அந்நிய நாட்டு பணம்  இந்திய பங்கு சந்தையில் முதலீடாக கூடியதன் நோக்கம் பற்றியும் ,குஜராத் மாநிலத்தில் பெண்கள் பெருமளவில் ரத்த சோகை நோயால்  அவதிப்படுவதையும், அந்த மாநில அரசு தினமும் 10 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வறுமை கோட்டிற்கு மேல் வாழ்வதாக கூறுவதின்  அவலத்தையும் சுட்டி காட்டினார். கார்போரேட்  நிறுவனங்களும், அவைகளின் பெரும்பாலான ஊடகங்களும்  மோடியை தூக்கி நிறுத்துவதன் நோக்கத்தை அவர்   எடுத்துரைத்தார். ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவின்படி அனைத்து மாநிலங்களிலும் இக்  கருத்தரங்கம் வெற்றிகரமாய்   நடை பெறுவதை சுட்டி காட்டினார். நிலுவையில் உள்ள  கோரிக்கைகளுக்காக அனைத்து சங்கங்களும் இணைந்து போராட உள்ள சூழலையும் அவர் கூறினார். தோழர் வெங்கட்ராமன் நன்றியுரை கூற கருத்தரங்கம் இனிதே முடிவுற்றது.

Thursday 17 April 2014

மத்திய சங்க (CHQ) செய்தி . . .





 அனைவருக்கும் CUG இலவச SIM 

அனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM வழங்க வேண்டும்என்பது JCM தேசியக்குழு கூட்டக்கோரிக்கைஇதனைஅமுல்படுத்தும் முகத்தான் தற்போது வழங்கப்பட்டுள்ளஇலவச SIM விவரங்களை மாநில நிர்வாகங்களிடம்  BSNLநிர்வாகம் கேட்டுள்ளது. CUG இலவச SIMல்  மாதந்தோறும்ரூ.200/=க்குப்பேசலாம்.
குழந்தை பராமரிப்பு விடுப்பு 
CHILD CARE LEAVE - மத்திய அரசில் பணி புரியும் பெண்கள் 730நாள் குழந்தை பராமரிப்பு விடுப்பையும் ஒட்டு மொத்தமாக எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம்தனது தீர்ப்பில் கூறியுள்ளதுவிடுப்பு விதிகளின்படிவருட விடுப்பை ஒட்டு மொத்தமாக எடுக்கஇயலாது என்ற கல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு இதன் மூலம் திருத்தப்பட்டுள்ளது.
TTA பயிற்சிக்கால உதவித்தொகை 
TTA பயிற்சி செல்லும் தோழர்களின் பயிற்சிக்கால உதவித்தொகை STIPEND புதிய சம்பளவிகிதத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் கோரிக்கை எழுப்பிவந்ததுதற்போது மாற்றியமைக்கப்பட்ட சம்பள விகிதத்திற்கேற்ப STIPEND தொகைவழங்கப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் விளக்கமளித்துள்ளதுஇதன்படி புதிய சம்பளவிகிதத்தில் 70 சதமும் அதற்கான IDA வும் பயிற்சிக்கால உதவித்தொகையாக  வழங்கப்படும்
அகில இந்திய அளவில் JAC சார்பாக கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள். . .
 ஊழியர்சங்கங்களின் JAC  கூட்டு நடவடிக்கை குழு 09/04/2014 அன்று ஆர்பாட்டம் டெல்லியில் நடத்திகோரிக்கை மனு அளித்துள்ளதுதேர்தலுக்கு பின் அடுத்த கட்ட போராட்டம் முடிவுசெய்யப்படும்.
30 அம்ச கோரிக்கைகள்
1)       குரூப் “டி” ஊழியர்களின் ஊதிய தேக்க நிலை!
2)       01/01/2007 க்கு பின் பணிஅமர்ந்த ஊழியர்களின் ஊதிய பாரபடசம் நீக்கம்1
3)       PLI போனஸ் PMS உடன் இணைக்காதேநட்டம் என்றாலும் போனஸ் வழங்கு!
4)       NEPP பதவிஊயர்வில் உள்ளப் பாதகங்களை நீக்கு!
5)       LTC,மருத்துவபடி,விடுப்பை காசாக்குதல் திரும்ப வழங்கு!
6)       E1 ஊதிய நிலையை உடனே வழங்கு!
7)       பரிவு அடிப்படை பணி நிபந்தனைகளை நீக்கு!
8)       பதவி பெயர் மாற்றம்விரைந்து செய்!
9)       தற்காலிக JTO க்களை நிரந்தரபடுத்து!
10)    இலாக்கா தேர்வில் SC/ST ஊழியருக்கு உள்துறைஆணைப்படிசலுகை மதிப்பெண் வழங்கு!
11)    நேரிடை ஊழியர்களின் ஊதிய நிர்ணயம்30% வழங்கு!
12)    JTO/JAO தேர்வுகளில் சலுகை மதிப்பெண் வழங்கி காலியான பதவிகளை நிரப்பு!
13)    புதிய ஆளெடுப்பு நடத்தி ஊழியர்களை நியமிக்க வேண்டும்!
14)    விடுபட்ட TSM/கேஸுவல் ஊழியர்களை நிரந்தரபடுத்து!
15)    காண்டிராக்ட் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்,நல சட்டங்கள் உத்திரவாதபடுத்து!
16)    நிர்வாக அதிகாரி தேர்வுக்கு ஊழியர்களை அனுமதி!
17)    பயிற்சி முடித்த RM களை TM ஆக பதவிஉயர்வு வழங்கு!
18)    TSM /கேஸுவல் ஊழியர்களுக்கு ஈட  ஊதியம் வழங்கு!
19)    SC/ST  காலிடங்களை நிரப்பு!
20)    Sr.TOA/TM/டிரைவர் ஊதிய நிலையை மாற்றி அமை!
21)    DOT காலத்தில் பயிற்சி துவங்கிய ஊழியர்களுக்கு PO வழங்கு!
22)    01/10/2000க்குமுன் பதவிஉயர்வு பெற்று ஆண்டு உயர்வு தேதியில் ஊதிய நிர்ணயம் அனுமதி!
23)    78.2% ஊதிய நிர்ணயம் நிலுவை வழங்கு!
24)    முதல் ஊதியமாற்ற ஆனாமலியை தீர்த்துவை!
25)    டெலிகாம் பேக்டரி பபுனரமைப்பு செய்!
26)    இலாக்கா தேர்வில் உள்ள நிபந்தனைகளை தளர்த்து!
27)    அனைவர்க்கும் இலவச சிம் வழங்கு!
28)    78.2% ஊதிய நிர்ணயம் ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்கு!
29)    அலவன்சுகளை உயர்த்து!
30)    கால் செண்டர் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்காதே!
                 அனைவரும் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவோம்!!