Wednesday 12 February 2014

யாரு மனசில யாரு




யாரு மனசில யாரு

       யாரு மனசில யாரு 
         இந்தியாவின் அமெரிக்க தூதர் நான்சி பாவல்,நாளை பாஜக பிரதமர் வேட்பாளராக உள்ள நரேந்திர மோடி அவர்களை சந்திக்க உள்ளார் . 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் அதில் அவரது பங்கு உள்ளது என்று , 2005 ல் இருந்து நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இப்போது மட்டும் நரேந்திர மோடியை சந்திக்க இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் துடிப்பது, ஏன்? காரணம் என்ன ?சர்வதேச தர நிறுவனம் ' மூடி'ஸ் ' வரும் வரும் நாடளுமன்ற தேர்தலுக்கு பின் பிராந்திய கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கலாம் என்றும் அதனால் இந்தியாவில் புதிய தாராள பொருளாதார கொள்கைகளை செயல்படுத்துவது பாதிக்கும், என்று ம் கூறியுள்ளார்,மேலும் நிச்சயமாக இந்தியாவில் செயல்படும் பல தேசிய நிறுவனங்களின் நலன்கள் பாதிக்கும். எனவே அமெரிக்காவின் பணக்கார நவீன தாராளவாத கொள்கைகளை செயல்படுத்த நரேந்திர மோடியை முன்னிறுத்தவே இந்த நான்சி பாவல் மற்றும் நரேந்திர மோடி இடையே ஒரு கூட்டதை நடத்த அமெரிக்காவின் திடீர் நடவடிக்கை எடுக்க காரணம்.இந்தியாவின் அடுத்த ஆட்சியை யார் முடிவு செய்ய வேண்டும்.இந்திய மக்களா? அமெரிக்காவா ? பதில் உங்கள் விரலில் !
  நன்றி  by 

No comments:

Post a Comment