Wednesday 22 January 2014

இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநாடு



இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநாடு



நாக்பூரில் திங்களன்று துவங்கிய
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 
 23வது மாநாட்டின் பிரதிநிதிகள் அமர்வு  
நெல்சன் மண்டேலா அரங்கில்
  செவ்வாயன்று துவங்கியது.
 ஜனவரி 24ம்தேதி வரை நடைபெறும்  
பிரதிநிதிகள் மாநாட்டில்
  நாடு முழுவதிலிருந்தும்  
பிரதிநிதிகளும் பார்வையாளகளுமாக  
சுமார் 2000 பேர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக திங்களன்று பொது மாநாட்டினைத் துவக்கிவைத்த சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரிஎம்.பி., பேசியதாவது:
நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மல்ஹோத்ரா குழு எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறைக்காப்பீட்டு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படவேண்டும் என்று கூறியதுபாபர் மசூதிஇடிப்பிற்குப்பின் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப்பின் இந்த முயற்சி நின்றுபோனது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் காப்பீட்டுத்துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்கமுயற்சித்தபோதுகாங்கிரஸ் 26 சதவீதம் போதும் என்று எதிர்த்தது.
எல்ஐசி ஊழியர்கள் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான பொதுமக்களைச் சந்தித்துக் கையெழுத்துப்பெற்றனர். இது பல ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகையைவிட அதிகமாகும். ஆனாலும்பாஜகநிறைவேற்றியதுஅதற்கு காங்கிரஸ் உதவியதுதற்போது காங்கிரஸ் 49 சதவீதமாக்கமுயற்சிக்கும்போதுபாஜக எதிர்ப்பதாகக் கூறிக்கொள்கிறது

No comments:

Post a Comment