Friday 3 January 2014

மத்திய சங்க செய்திகள்




மத்திய சங்க செய்திகள்

        டைரக்டர் (மனிதவளம் ) திரு .A .N .ராய் அவர்களுடன் நமது பொது செயலர் இன்று பேசிய போது  18-10-2013 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நிர்வாகத்துடன்  உடன்பாடு ஏற்பட்ட பிரச்சனைகளில்  தீர்வில்  எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை சுட்டி கட்டியுள்ளார் .
  01-01-2007 க்கு பிறகு பணி நியமனம்  செய்யப்பட்ட ஊழியர்களின் ஊதிய குறைப்பு பிரச்சனையிலும் தீர்வில் கடும் கால தாமதம் ஏற்படுவதை கடுமையாக நமது பொது செயலர் திரு R .K .கோயல் ,பொது மேலாளர் (Estt ) அவர்களிடம் சுட்டி காட்டி உள்ளார் .இது விசயமாக நமது மத்திய சங்கம் நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம் படிக்க :Click Here
   மார்ச்-2014 இறுதிக்குள் 1800 க்கும் மேற்பட்ட  Officiating JTO க்களின் பிரச்னை தீர்வாகும் என நமது மத்திய சங்கம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது .இப் பிரச்சனையை நமது மத்திய சங்கம் தொடர்ந்து நிர்வாகத்திடம் எழுப்பி வருகிறது .
              TTA கேடர்க்கான புதிய ஆளெடுப்பு விதிகளை நிர்வாகம் இறுதி செய்து விட்டது .10+2 தகுதி அல்லாத ஊழியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி அதில் தேர்வு பெறுபவர்களை போட்டி தேர்வில் அனுமதிப்பது என்ற நமது கோரிக்கை ஏற்கப்படவில்லை .இது விசயமாக நமது பொது செயலர் திரு R .K .கோயல் ,பொது மேலாளர் (Estt ) அவர்களிடம் இன்று பேசிய போது குறைந்த பட்சம் ஒரு தகுதி தேர்வை மட்டுமாறு நடத்த வேண்டும் என வலியுறுத்திய போது நிர்வாகம் இந்த பிரச்னை விசயமாக நீதி மன்ற தீர்ப்பு வந்தவுடன் நடத்துவதாக உறுதி கூறி உள்ளார்.அதே போல் JTO ஆளெடுப்பு விதிகளை இறுதி செய்யும் போது தேர்வில் பங்கேற்க சேவைக்கால வரம்பை குறைக்க வேண்டும் என்ற நமது கோரிக்கையையும் நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளார் .

No comments:

Post a Comment