Friday 31 January 2014

பணி நிறைவு - உளப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்...



BSNL ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் தோழர் M.நாராயணசாமி இன்று BSNL பணி நிறைவு

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here



     நமது மாநில உதவிச் செயலர்     அருமைத் தோழர்.எம்.நாராயணசாமி அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் 
31-01-2014 இன்று
பணி நிறைவு பெறுகிறார் ... 
அவரின்
 
பணி நிறைவுக்காலம்
சிறப்புடன் அமைய நமது BSNLEU 
திருநெல்வேலி 
மாவட்ட சங்கத்தின் சார்பாக         உளப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்...
--என்றும் தோழமையுடன் C.சுவாமிகுருநாதன்.D.S-BSNLEU 

ஊதிய குறைப்பு பிரச்னை



ஊதிய குறைப்பு பிரச்னை

     01-01-2007 க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு(TTA, TOA மற்றும் RM) ஊதிய குறைப்பு ஏற்பட்டதை தீர்க்க திட்டவட்டமாக JTO கேடருக்கு வழங்கப்பட்டதை போல் 5 இன்கிரிமெண்ட் வழங்க வலியுறுத்தி நமது சங்கம் மீண்டும் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.3 பொது மேலாளர் அடங்கிய குழு ஒரு இன்கிரிமெண்ட் மட்டும் வழங்க வேண்டும் என்றும் அதற்கு நிலுவை தொகை கிடையாது என்றும் பரிந்துரைத்த பாரபட்சத்தால் நமது நிறுவனத்தின் செயல் திறன் பாதிக்கப்படும் என நமது சங்கம் எச்சரித்து உள்ளது .நமது சங்க கடிதம் படிக்க :-Click Here

Monday 27 January 2014

மாநில செயலக முடிவுகள்




மாநில செயலக முடிவுகள்

மாநில செயலக முடிவுகள் படிக்க :-Click Here

சென்னை கூட்டுறவு சங்க தேர்தல்



மாவட்ட செயற்குழு கூட்டம் TNTCWU



தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
                                     திருநெல்வேலி மாவட்டம்
                           மாவட்ட செயற்குழு கூட்டம்
இடம்: BSNLEU சங்க அலுவலகம். வண்ணார்பேட்டை
    02/02/2014 காலை 10.௦௦.
ஆய்படு பொருள் :
                      1. பிப்ர்வரி ௦7 சங்க அமைப்புதினம்
                     2. EPF /ESI பிரச்சனைகள் 
                      3. நிதிநிலை 
                      4. மற்றவை தலைவர் அனுமதியுடன் 

தலைமை;  தோழர்K.செல்வராஜ்.
                 மாவட்டத் தலைவர்


சிறப்புரை; தோழர்.C. பழனிச்சாமி அவர்கள்
 துணைப் பொதுச்செயலாளர் TNTCWU


வாழ்த்துரை 
 தோழர்.Dகோபாலன். அவர்கள்
மாநில அமைப்பு செயலர் BSNLEU

தோழர் C.சுவாமி குருநாதன் அவர்கள்

          மாவட்ட செயலர் BSNLEU


                                                                                                      தோழமையுடன் 
                                                                     
                                                                                                                                          S.முருகன்
                                                                  மாவட்ட செயலர்  TNTCWU



Saturday 25 January 2014

குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தின வாழ்த்துக்கள்


   அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் மத்தியில் அமைதி, நட்பு, சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்று, நாம் அனைவரும் இந்த குடியரசு விழாவில் விழாவில் உறுதிமொழி எடுத்து கொள்வோம் என அனைவர்க்கும் நெல்லை மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .

Wednesday 22 January 2014

இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநாடு



இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநாடு



நாக்பூரில் திங்களன்று துவங்கிய
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 
 23வது மாநாட்டின் பிரதிநிதிகள் அமர்வு  
நெல்சன் மண்டேலா அரங்கில்
  செவ்வாயன்று துவங்கியது.
 ஜனவரி 24ம்தேதி வரை நடைபெறும்  
பிரதிநிதிகள் மாநாட்டில்
  நாடு முழுவதிலிருந்தும்  
பிரதிநிதிகளும் பார்வையாளகளுமாக  
சுமார் 2000 பேர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக திங்களன்று பொது மாநாட்டினைத் துவக்கிவைத்த சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரிஎம்.பி., பேசியதாவது:
நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மல்ஹோத்ரா குழு எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறைக்காப்பீட்டு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படவேண்டும் என்று கூறியதுபாபர் மசூதிஇடிப்பிற்குப்பின் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப்பின் இந்த முயற்சி நின்றுபோனது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் காப்பீட்டுத்துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்கமுயற்சித்தபோதுகாங்கிரஸ் 26 சதவீதம் போதும் என்று எதிர்த்தது.
எல்ஐசி ஊழியர்கள் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான பொதுமக்களைச் சந்தித்துக் கையெழுத்துப்பெற்றனர். இது பல ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகையைவிட அதிகமாகும். ஆனாலும்பாஜகநிறைவேற்றியதுஅதற்கு காங்கிரஸ் உதவியதுதற்போது காங்கிரஸ் 49 சதவீதமாக்கமுயற்சிக்கும்போதுபாஜக எதிர்ப்பதாகக் கூறிக்கொள்கிறது

பி எஸ் என் எல் காசுவல் . காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு





         புவனேஷ்வரில்   பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர்  சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம்18-01-2014மற்றும்19-01-2014 தேதிகளில்  நடைபெற்றது .
அக் கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம் உருவாக்க பட்டுள்ளது.

·                     26-02-2014 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் 
·                     26-03-2014 அன்று தர்ணா போராட்டம் 
·                     23-04-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி 
·                     CMD அலுவலகம் நோக்கி பேரணி (தேதி பின்னர் அறிவிக்கப்படும் )
·                     ஒரு நாள் வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)

கோரிக்கைகள் :-
1.           விடுபட்ட ஒப்பந்த/காசுவல்ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
2.           அரசாங்கத்தின்  உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
3.           சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி  ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
4.           பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
5.           சமவேலைக்கு சமஊதியத்தை  ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். 
6.           EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.
7.           வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும்  வழங்கிட வேண்டும்.
8.           பழி   வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
9.           பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர்  சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.


Sunday 19 January 2014

IDA உத்தரவு




IDA உத்தரவு

2014 ஜனவரி 1 ஆம் தேதி முதல் உயர்ந்துள்ள   5 %  IDA  உத்தரவை பி எஸ் என் எல் நிர்வாகம் வெளியிட்டு விட்டது .உத்தரவை பார்க்க :-Click Here

Friday 17 January 2014

பரிவு அடிப்படையில் பணி நியமனம்



பரிவு அடிப்படையில் பணி நியமனம்

          பரிவு அடிப்படையில் பணி நியமனம் விசயமாக கீழ்கண்ட  சில திருத்தங்களை நிர்வாகம் செய்ய உள்ளது .இந்த திருத்தங்கள் நிர்வாக கமிட்டி ஒப்புதலுக்கு விரைவில் செல்ல உள்ளது 
 i )உடல் ஊனமுற்ற மகன் / மகள். 
(ii) பெற்றோர்  இருவரையும் இழந்த  மகன் / மகள்
(iii)வாடகை வீட்டில் வாழும் விண்ணப்பதாரர். 
(iv)அரசாங்கம் ஓய்வூதிய வராத  இறந்தவரின் வாரிசு 
 பரிவு அடிப்படையில் வேலை நியமனத்தில்  மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற நமது  BSNLEU சங்கத்தின் தீவிர முயற்சியே இம்மாற்றம் .