Monday 30 September 2013

TNTCWU மாநிலமாநாடு





சொசைட்டி


94 on mobile connection provided to the Telecom Mechanics/Regular Mazdoors



BSNLEU writes to BSNL Management on provision of facility of dialing mobile levels other then 94 on mobile connection provided to the Telecom Mechanics/Regular Mazdoors.<<view letter>>

உண்மையே உன் விலை என்ன?


உண்மையே உன் விலை என்ன?

அருமை தோழர்களே !
சில NFTE - WEBSITE-களில் 29.09.2013 அன்று நடைபெற்ற சென்னை  சொசைட்டி General Body  கூட்டத்தில் தோழர். வீரராகவன்  CITU போக்குவரத்து ஊழியர்களால் தாக்கப் பட்டதாக வழக்கம் போல் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டுள்ளார்கள். சொசைட்டி பேரவை கூட்டம் நடைபெற்ற இடம் ஸ்ரீரிவாரூ வெங்கடசலபதி பாலஸ்" ஆகும்.  இம்மண்டபம் சென்னை வானரகம் பகுதியில் உள்ளது.  சொசைட்டி கூட்டத்திற்கு BSNL-ID.CARDஉள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். 10-ற்கும் மேற்பட்ட கவுண்டர்கள் மூலமாக காவல் துறையினுடைய மேற்பார்வையோடு நடந்தேறியது 
{நமது BSNLEU  சங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்}.  வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக பனி ஓய்வில் சென்றுள்ள தோழர் C.K. மதிவாணன் உட்பட வெளியில் தான் நிற்க வேண்டிஇருந்தது.   ஆகவேவெளியாட்கள் குறிப்பாக CITU தோழர்களை வைத்து தாக்கியதாக கூறுவது கோயபல்ஸ் வேலை என்ற உண்மை புலப்படும்.
நடைபெற்ற பேரவையில் 40 தோழர்கள் பேச அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
நியாயப்படி தமிழகத்திற்கு 11 இயக்குனர்களும்சென்னைக்கு 7இயக்குனர்களும்  விகிதாசார அடிப்படையில் பிரித்திருக்க வேண்டும். இருப்பினும் ஒற்றுமை கருதி தமிழ்நாட்டிற்கு 10 இயக்குனர்களும்,சென்னைக்கு 8 இயக்குனர்கள் என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனையும் BSNLEU சங்கம்தான் தந்தது என்பது குறிப்பிட தக்கது.  மேற்கண்டபடி தேர்ந்தெடுக்கப்பட்ட 18 இயக்குனர்களும், 2 பெண் இயக்குனர்களும், 1 SC/ST  இயக்குனர்களையும் நியமனம் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
30.09.2013 அன்று  நடைபெற்ற RGB கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எட்டப் பட்டுள்ளன.
1. 1.10.2013 முதல் வட்டி விகிதம் 16.5%-லிருந்து 15.5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
2. அக்டோபர் 2013 சம்பளத்தில் DIVIDEND  12% வழங்கப்படும்.
3. ORDINARY லோன் 4 லட்சத்திலுருந்து 5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. இது ஜனவரி 2014 முதல் அமுலுக்கு வரும்.
4. FAMIL WELFARE SCHEME  பிடித்தம் ருபாய் 600-லிருந்து 800-ஆக உயர்த்தப் பட்டுள்ளதால்,  இன்சூரன்ஸ் 3 லட்சத்திலுருந்து 4 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.
இம்முடிவுகள் நமது BSNLEU  சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
எஸ். சூரியன் - மாவட்ட செயலர்.

IDA அதிகரிப்பு 01-10-2013 இருந்து 6.6% ஆகும்.


 
IDA அதிகரிப்பு 01-10-2013 இருந்து 6.6ஆகும்.
IDA 01-10-2013 முதல் 6.6% ஆகும்இந்த IDA அதிகரிப்பு01-10-2013 முதல்அமுல்படுத்தப்படுள்ளது மொத்த I.D.A. (78.9% + 6.6%) 85.5% இருக்கும்.

14th பிஎஸ்என்எல் நிறுவன தினம்




14th  பிஎஸ்என்எல் நிறுவன தினம் 
நமது நிறுவனம் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் முடிவடையும் சூழ்நிலையில், இந்திய அரசாங்கத்தின் கொள்கைகள் நமது நிறுவனத்தை பலவீனப்டுத்தும் சூழலில் நமது BSNLEU சங்கம் தொடர்ந்து அனைவரையும்  ஒற்றுமைப்படுத்தி  ஒரு சமரசமற்ற போராட்ட பாதையில்   சென்றதால்       நம் நிறுவனத்திற்கு வரவேண்டிய BWA spectrum தொகை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன .ஒரு கடினமான நிதி நெருக்கடி சூழலில்   இத் தொகை வருவது நமது நிறுவனம் மேலும் பலவீனபடுவதை தடுக்கும் . நல்ல சம்பளம் ,நல்ல பதவி உயர்வு   ஆகியவற்றை தந்த இன் நிறுவனத்தை மேம்படுத்த நம் பணி கலாச்சாரத்தை மாற்றி,சேவையை மேம்படுத்தி  நமது நிறுவனத்தை லாபகரமாக மாற்றிட சபதமேற்போம் ! நமது நிறுவனம்   உதயமான   நன் நாளில் .  


‘BSNL Formation Day’ and Festival Bonanza, 10% Extra 3G Data, Full Talk Time and More


BSNL Launches ‘BSNL Formation Day’ and Festival Bonanza, 10% Extra 3G Data, Full Talk Time and More
India’s Bharat Sanchar Nigam Ltd (BSNL) today announced the launch of special offers ranging from 10 percent Extra 3G Data Usage on all STV,  Full Talk Time and Free SIM card on the occasion of BSNL Day (1 October) and upcoming festivals like Mahatma Gandhi Jayanti, Dussehra, Id-ul-Zuha, and Christmas as a goodwill gesture.
Aiming to attract more subscribers and give a tough competition to its rivals,  BSNL launches Various BSNL Offers:
Mobile Internet – 3G Data Offer : 10% extra on existing bundled 3G and 2G free data usage for all STVs with MRP of Rs.98 and above under prepaid services and for all  data plans under postpaid services. This scheme is available for a period of 90 days w.e.f. 01.10.2013.
Prepaid Data Pack
Existing Free Data Usage
Total Free Data Usage With 10% Extra offer
Validity
Rs.98
700 MB
770 MB
21 Days
Rs.139
1 GB
1.1 GB
30 Days
Rs.251
2 GB
2.2 GB
30 Days
Rs.561
5 GB
5.5 GB
30 Days
Rs.821
7 GB
7.7 GB
60 Days
Rs.1011
10 GB
11 GB
30 Days
Post-Paid Data Pack
Existing Free Data Usage
Total Free Data Usage With 10% Extra offer
PerMonth
Rs.125
1 GB
1.1 GB
Rs.225
2 GB
2.2 GB
Rs.501
5 GB
5.5 GB
Rs.666
7 GB
7.7 GB
Rs.901
10 GB
11 GB

Full Talk Time Offer : All Prepaid customers will getFull usage value equal to MRP on Top-up vouchers/C-top-up/Flexi top-up with MRP of Rs.100 to Rs.199. This offer is applicable for a limited period of 15 days in a month for 3 months (October, November and December) w.e.f. 01.10.2013.
Free SIM Card offer for Prepaid customers : Normal SIM with MRP of Rs.20 will be offered free of cost for all new activations for 7 days from 1st October, 2013 to 7th October, 2013.
BSNL prepaid customers can recharge their prepaid mobile account for availing these special promotional offers of 10% Extra 3G Free Data Usage or Full Talk Time offer to  through BSNL Portal or through easy recharge from any BSNL CSC / Retailer / Franchisee.
In Postpaid services, 10% Extra 3G data usage will be credited automatically to all subscribers (existing and new)  for a period of 90 days from 1st October, 2013.


Friday 27 September 2013

அக். 3 : சர்வதேச போராட்ட தினம்



அக். 3 : சர்வதேச போராட்ட தினம்

உலக தொழிற்சங்க சம்மேளனம்  ஒவ்வோராண்டும் அக்டோபர் 3 ஆம் நாளை சர்வதேச போராட்ட தினமாக  அனுசரிக்குமாறு உலகில் உள்ள உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் அறை கூவல் விடுத்திருக்கிறது.கடந்த மூன்றாண்டு காலமாக உலகத் தொழிற்சங்க சம்மேளனம் சர்வதேச போராட்ட தினத்தைக் கொண்டாடி வருகிறது. 2009 ஏப்ரல் 1 அன்று சுரண்டலுக்கு எதி ராக தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என்ற முழக்கத்துடன் இந்நாள் அனுசரிக்கப்பட்டது.2010இல் செப்டம்பர் 7 அன்று இந்நாள் அனுசரிக்கப்பட்டது. முதலாளித்துவ உலகம் ஆழமான நெருக்கடிக்குள்ளாகி சிக்கித் தவித் துக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி,
மிக வும் கடினமாகப் போராடி ஈட்டிய உரிமை களைப் பாதுகாத்திடுவோம் என்றும் முழக்க மிடப்பட்டது.இந்தியாவில், ஆட்சியாளர்களின் கொள் கை களை மாற்றக் கோரியும், உழைக்கும் மக்க ளின் அத்தியாவசியக் கோரிக்கைகளை முன்வைத்தும் நாடு தழுவிய அளவில் மத்தி யத் தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய சம் மேளனங்கள் இணைந்து நடத்திய நாடு தழு விய அளவிலான வேலை நிறுத்தமும் அனு சரிக்கப்பட்டதும், அதே நாளில் தற்செயலாக நடந்தது.உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் 16 ஆவது மாநாடு, 2011 ஏப்ரலில் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட் டின் போதுதான் உலகத் தொழிற்சங்க சம் மேளனத்தின் அமைப்பு தினமான அக்டோபர் 3 அன்று சர்வதேச போராட்ட தினம் அனு சரிக்குமாறு அறைகூவல் விடுக்கப்பட்டது. உலகத் தொழிற்சங்க சம்மேளனம் 1945 அக்டோபர் 3 - 8 தேதிகளில் பாரிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச தொழிற்சங்கங்களின் மாநாட்டில் அமைக்கப்பட்டது.
உலகத் தொழிற் சங்க சம்மேளனம் வரலாற்றின் பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கேற்ப வர்க்கரீதியாக அமைந்த சர்வதேச தொழிற்சங்கமாக இன்றளவும் தொடர்கிறது. 16ஆவது மாநாட்டின் அடிப்படையில், 2011 அக்டோபர் 3, அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு, கூட்டு பேர உரிமைகளை உத்தர வாதப்படுத்துதல், தொழிற்சங்க மற்றும் ஜன நாயக உரிமைகளை வழங்குதல், வாரத்தில் ஐந்து நாட்களுடன் 35 மணி நேர வேலை, சிறந்த ஊதியம் ஆகிய கோரிக்கை சாசனங் களுடன் அனுசரிக்கப்பட்டது.2012ஆம் ஆண்டு இந்நாள் உலகம் முழு வதும் உண்ண உணவு, குடிதண்ணீர், சுகா தாரம், கல்வி மற்றும் வீட்டுவசதி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அனுசரிக்கப் பட்டது.உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைக் கவுன்சில் இக்கோரிக்கைகளை இறுதிப்படுத்துகையில், தொழிற்சங்கங்கள் மனிதகுலத்தின் இந்த அடிப்படைக் கோரிக் கைகளை எழுப்பிட வேண்டும் என்று குறிப் பிட்டது. உலகில் உள்ள பன்னாட்டு நிறுவனங் கள் பல நாடுகளிலும் உள்ள இயற்கைச் செல் வங்களை சூறையாடிச் செல்வதை அடுத்து இவ்வாறு கோரிக்கைகளை உலகத் தொழிற் சங்க சம்மேளனம் வடிவமைத்தது. இவ்வாறு உலகின் பல நாடுகளிலும் இயற் கைச் செல்வங்களைச் சூறையாடிச் செல்லும் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் விதத்தில் இக்கோரிக்கைகளின் மீதான பிரச்சாரங்கள் நடைபெற வேண்டும் என்றும் உலகத் தொழிற் சங்க சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.2013இல் இயக்க தினம்உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைக் கவுன்சில் 2012ஆம் ஆண்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சமயத்தில், நாம் இந்த அடிப்படைக் கோரிக்கைகளின் மீதான பிரச்சாரத்தைத் தொடர வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது.
மனிதகுலம் உயிர்வாழ்வதற்குத் தேவையான அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்போது மறுக்கப் பட்டிருக்கின்றன. எந்த விதத்திலாவது கொள் ளை லாபம் ஈட்ட வேண்டும் என்கிற சுரண் டும் கூட்டத்தினரின் வேட்கையானது, இயற் கை வளங்களை கொள்ளையடிப்பதற்கும், மக்களை இரக்கமின்றி சுரண்டுவதற்கும் இட்டுச் சென்றுள்ளது.எனவே, இந்த ஆண்டும் உணவு, தண் ணீர், சுகாதாரம், கல்வி மற்றும் வீட்டுவசதி முதலியவற்றிற்கான கோரிக்கைகளின் அடிப்படையில் நம் போராட்டங்கள் தொடரும். 85 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஊட்டச் சத்துக்குறைவால் பட்டினி கிடந்து வாடிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் பன் னாட்டு நிறுவனங்கள் உலகின் ஒட்டுமொத்த உணவுத் துறையையும் தங்கள் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் கூட நம் வேளாண் துறையா னது கார்ப்பரேட்மயமாகிக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் அனைவருக்குமான பொது விநியோக முறை வேண்டுமென்கிற கோரிக் கையை ஏற்க மறுப்பதன் மூலமாக உணவுப் பாதுகாப்பு என்பதும் காலங்கடத்துவதற்கான பசப்பு வார்த்தையாக மாறிக் கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைவு, எடை குறை வாயிருக்கும் குழந்தைகள், ரத்தச்சோகை, மற்றும் பல்வேறு விதமான நோய்களுக்கு குழந் தைகள் ஆளாகியிருத்தல் ஆகிய அனைத்திற் கும் முறையான உணவு அவர்கள் உட்கொள் ளாததே காரணங்களாகும். உலகில் குழந்தை கள் அதிகம் உள்ள நாடு நம் நாடுதான். இதில் 40 விழுக்காட்டுக் குழந்தைகள் போதிய ஊட் டச்சத்தின்றி வாடி வதங்கிக் கொண்டிருக் கின்றன.நாட்டின் மக்கள்தொகையில் கணிசமான அளவிற்கு உணவு நெருக்கடியால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டின் வறுமை குறைந்துவிட்டதாக மிகவும் நகைக்கத்தக்க விதத்தில் ஆட்சியாளர்கள் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்த போதிலும் இதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதி கரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில்தான் தரமான, பாதுகாப்பான, மலிவான விலையில் உணவுகள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் மற்றும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று உலகத் தொழிற் சங்க சம்மேளனம் கோருகிறது. இந்தியாவில், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரிசி/கோதுமை கிலோ கிராம் 2 ரூபாய் விலையில் மாதத்திற்கு 35 கிலோ கிராம் அனைவருக்கு மான பொது விநியோக முறை மூலமாக வழங் கப்பட வேண்டும் என்பதை நாம் கோரிக்கை யாக வைத்திருக்கிறோம்.தண்ணீர்மூன்றாம் உலகப் போருக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக தண்ணீர் தற்போது சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுத்த மான தண்ணீருக்கான உரிமை அடிப்படை உரிமையாகும். ஆயினும் நாட்டின் பெரும் பாலான பகுதிகளில் இது இன்றளவும் கன வாகவே நீடிக்கிறது.சர்வதேச அளவில், தண்ணீர் என்பது பன் னாட்டு நிறுவனங்களின் மிகப்பெரிய வர்த்தக மாக மாறியிருக்கிறது. உலகில் ஐந்து வயதுக் குக் குறைவாகவுள்ள 15 லட்சம் குழந்தைகள் போதிய அளவு பாதுகாப்பான குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததன் காரணமாக இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மக்களுக்கு நாள்தோறும் கிடைக்க வேண் டிய அடிப்படைத் தேவை தண்ணீர் என் பதையும், பாசனத்திற்கும் தண்ணீர் அவசியம் தேவை என்பதையும் ஆட்சியாளர்கள் அடி யோடு மறந்து விட்டு, மத்திய அரசு தன்னு டைய தண்ணீர்க் கொள்கையையும் அனைத்து நீர்வள ஆதாரங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கக் கூடிய விதத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.உலகத் தொழிற்சங்க சம்மேளனம், உல கில் உள்ள ஒவ்வொருவருக்கும் பாதுகாக்கப் பட்ட குடிநீர் வழங்கப்படுவது உத்தரவாத மாக்கப்பட வேண்டும் என்று கோருகிறது. கல்விஅனைவருக்கும் கல்வி என்பது உலகளா விய கோரிக்கையாகும். பல நாடுகளில் நவீன தாராளமயக் கொள்கைகள் ஆதிக்கம் செலுத் தக்கூடிய நிலையில், கல்வி என்பது மிகவும் லாபம் தரக்கூடிய தொழில்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. அரசாங்கம் கல்வி அளிக்க வேண்டும் என்பது அநேகமாக கைவிடப் பட்டு வருகிறது. கல்வித்துறையில் நெருக்கடி ஆழமாகிக் கொண்டிருப்பதை அடுத்து, இளைஞர்கள் கல்வி கற்பதற்கான தங்கள் அடிப்படை உரி மைகள் மறுக்கப்படுகிறார்கள். இந்தியாவின் கல்வி முறை அனைத்து அம்சங்களிலும் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. இது மாணவர்களின் கோரிக்கை மட்டுமல்ல. மத்திய அரசும் அடிப் படைக் கல்வியை ஓர் அடிப்படை உரிமை யாக்கி இருப்பதாகக் கூறிக்கொண்டிருக்கிறது.
ஆனால். முறையான உள்கட்டமைப்பு வசதி கள் இல்லாமல், போதிய அளவிற்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல், கல்வி அமைப்பு முறையும் கூட வர்க்க அடிப் படையில் பிளவுபட்டு நிற்கிறது. வசதி படைத்த ஒரு சிறிய அளவிலான கூட்டம் மட்டுமே பணத்தை வாரி இறைத்து தாங்கள் விரும்பும் கல்வியைப் பெறுவதை உத்தர வாதப்படுத்திக் கொண்டுள்ளது. அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த் தெடுப்பதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் கல்வி முறை அமைந்திட வேண் டும். இதற்கு, முன்பு குறிப்பிட்டிருப்பதைப் போல, ஆரம்ப நிலையிலிருந்து உயர் நிலை வரை நாட்டின் கல்விக் கொள்கையில் முழு மையாக மாற்றம் செய்யப்பட்டாக வேண்டும். அனைவருக்கும் இலவசக் கல்வி என்கிற நம் பிரச்சாரம் தொடர வேண்டும்.சுகாதாரம்சுகாதாரம் அளிக்கப்படுவது என்பது வர்த் தகமல்ல என்று கூறப்பட்டாலும்கூட, இந்திய மற்றும் பன்னாட்டு வர்த்தகக் கார்ப்பரேட்டு களின் கைகளில் அது ஒரு வளம் கொழிக்கும் தொழிலாக மாறி இருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு என்பது பிரதானமாகத் தனியார் துறையிடம் சென்றுவிட்டது. பொதுவாக மக்கள் தங்கள் குறைந்த வருமானத்தில் மிகப் பெரிய தொகையை இதற்காகச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டிருக் கிறார்கள். சமூகப் பாதுகாப்பு என்பது தொழிற்சங்கங் களின் சாதனைகளில் முதன்மையான இடத்தை வகிக்கக்கூடியது. அது இன்றைய தினம் கைகழுவப்பட்டுக் கொண்டிருக் கிறது. உயிர்காக்கும் மருந்துகள் கூட பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற் குள் முழுமையாகச் சென்றுவிட்டன. இந்தியா வில் மேற்கொள்ளப்படும் மருந்து உற்பத்தி எதுவாக இருந்தாலும் அது பன்னாட்டு பகாசுர கம்பெனிகளால் விழுங்கப்பட்டு விடுகின்றன. அரசுத்தரப்பில் அடிக்கடித் தம்பட்டம் அடிக்கப்படும் மருந்து விலைக் கட்டுப்பாடு, சுகாதார மிஷன் போன்றவை அரசாங்கத் தரப்பில் கூறப்படுவதுபோல் எந்தப் பாதிப்பை யும் ஏற்படுத்திட வில்லை.சுகாதாரப் பாதுகாப்பு என்பது முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்திட வேண்டும் என்பது உலகத் தொழிற்சங்க சம்மேளனத் தின் கோரிக்கையாகும். அவ்வாறு செய்யப்படு வதன் மூலமாகத்தான் தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போதும் சரி, ஓய்வுபெற்ற பின்னரும் சரி ஒரு சுகாதாரமான வாழ்க்கைக் கான அனைத்து அம்சங்களையும் உத்தர வாதப்படுத்திட முடியும்.வீட்டுவசதி வீட்டுமனைகளின் விலைகள் விண் ணை நோக்கி சென்றுகொண்டிருக்கக்கூடிய நிலையில், நாட்டில் நகரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய சூழலில், வீட்டு வசதி என்பது நாட்டு மக்களை எதிர்நோக்கி இருக் கக்கூடிய மிக ஆழமான பிரச்சனையாக மாறி இருக்கிறது.
பாதுகாப்பான, வசிக்கத்தக்க மற் றும் மக்களால் வாங்கத்தக்க அளவிற்கான இல்லம் என்பதும் அவ்வாறு வாங்கப்படும் இல்லம் ஒருவர் அமைதியாகவும் கண்ணியத் துடனும் வாழ்வதற்கு உகந்ததாக அமையக் கூடிய விதத்திலும், எவராலும் வலுக்கட்டாய மாக வெளியேற்றப்பட முடியாத நிலையிலும் இருந்திட வேண்டும் என்பது உலகத் தொழிற் சங்க சம்மேளனத்தினால் முன்வைக்கப் பட்டுள்ள கோரிக்கையாகும். நாட்டு மக்களில் பெரும்பகுதியினர் மிக வும் மனிதாபிமானமற்ற நிலைமைகளில் குடி சைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெரும் பகுதியினர் வீடற்றவர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் வீட்டுவசதிக்கான நம்முடைய பிரச்சாரமும் போராட்டமும் நம் முக்கியமான பணிகளில் ஒன்றாகும்.உலகத் தொழிற்சங்க சம்மேளனம் எழுப்பி யிருக்கின்ற இவ்வனைத்துக் கோரிக்கை களையும் முன்வைத்து, இதனுடன் இணைந் துள்ள 126 நாடுகளைச் சேர்ந்த 8 கோடியே 40 லட்சம் உறுப்பினர்கள் அக்டோபர் 3 அன்று உலகம் முழுதும் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் இறங்கிட இருக் கிறார்கள். இந்தியாவிலும், உலகத் தொழிற்சங்க சம்மேளனத்துடன் இணைந்துள்ள அத் துணை அமைப்புகளும் அன்றைய தினம் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திடவுள்ளார்கள்.இவ்வியக்கத்தில் நம் சங்கத்தின் சார் பிலும் மிகப் பெரிய அளவில் பங்கேற்போம். நம் முடைய அடிப்படைக் கோரிக்கைகளாகவும் விளங்கிடும் இக்கோரிக்கைகளுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். மக்களுக்கு ஒரு நாகரிகமான வாழ்க்கையை உத்தரவாதப் படுத்துவதற்கான போராட்டத்திற்காக அவர் களையும் அணிதிரட்டிடுவோம்.