Friday 30 August 2013

சூது கவ்வும்





சூது கவ்வும்

சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடை பெற்றது அமெரிக்காவின் திட்டமிட்ட சதியே என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. சிரியாவில் பஷார் அல் அசாத் அரசிற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஆயுதக்குழுவினர் உள் நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தொடர்ந்து அமெரிக்க ஆதரவு ஆயுதக் குழுவினர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 21ம் தேதி சிரிய தலைநகர் டமாஸ்கஸின் கிராமப்புற பகுதி களில் போரின் போது ரசாயன ஆயுதங்கள் பயன் படுத்தப்பட்டு ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஐ.நாவின் சார்பாக ஆய்வு குழு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது யார் என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு முடிவு வருவதற் குள் சிரிய ராணுவம்தான் ரசாயனத் தாக்குதலை நடத்தியிருக்கிறது. அதனால் சிரியா மீது நேரடி யாக ராணுவத்தாக்குதல் நடத்தியே தீரு வோம் என அமெரிக்கா அவசரகதியில் அடாவடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற் கான பின்னணி தற்போது வெளிவந்துள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜனவரி 29ம் தேதி பிரிட்டனில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை ஒபாமா அரசு தனது ஆதரவு ஆயுதக்குழுவினர் மூலம் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தச் செய்து பழியை பஷார் அல் அசாதின் மீது சுமத்துவது; பின்னர் அதனையே காரணமாகக் கொண்டு நேரடி ராணுவத் தாக்கு தல் நடத்துவது எனத் திட்டமிட்டிருப்பதாகச் செய்தி வெளியிட்டிருந்தது.
அதற்கு ஆதாரமாக பிரிட்டனில் உள்ள பிரிதம் ஆயுத நிறுவனத்தின் மூலம் ரசாயன ஆயுத சப்ளை செய்வதற்கான மெயில் பரிமாற்றங்கள் மற்றும் முன்னதாக ஆயுதக் குழுவினர் முயல்கள் அடங்கிய அறை யில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அதன் விளைவை பார்ப்பது உள்ளிட்ட வீடியோக்களை யும் இணைத்து வெளியிட்டிருந்தது.
இதற்கான மூல ஆதாரங்களை மலேசியாவில் உள்ள ஒரு கணினி ஹேக்கர் மெயில்களை ஹேக் செய்த தில் இருந்து டெய்லி மெயில் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறார் என்பதும் தெரியவந்திருக் கிறது. அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளா தார நெருக்கடியில் ஏற்கனவே டெட்ராய்ட் நகரம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு விட்டது. நியூ யார்க் நகருக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட் டிருக்கிறது.
அமெரிக்காவின் நிதி நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருகிறது. வரும் அக்டோபர் மாதம் மத்தியில் அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு அளவான 16.7 லட்சம் கோடி அமெரிக்க டாலர் என்ற அளவை உயர்த்தா விட்டால், அமெரிக்கப் பொருளாதாரம் மிகப் பெரிய தீங்கைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற் படும் என்று அந்நாட்டின் நிதித்துறை அமைச்சர் ஜேக்கப் லீ அந்நாட்டின் நாடாளுமன்றத் திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் எப்படியாவது சிரியா மீது போர் தொடுத்து அதன் மூலம் அமெரிக்காவில் எழுந்து வரும் பொருளாதார நெருக்கடியை தீர்த்துக் கொள்ள வழி காண வேண்டும் என ஓபாமா குறி யாக இருந்து வருகிறார். ஆனால் நெடுநாட் களுக்கு இந்தச் சூழ்ச்சி பலனளிக்காது. இது போன்ற அடாவடிகளுக்கு எதிராக உலக மக்கள் விழிப்படையும் போது அமெரிக்க ஏகாதி பத்தியம் தலைகுப்புறவிழும்.
சொந்த மக்களை காப்பாற்ற கையாலாகாத அமெரிக்க அர சிற்கெதிராக அந்நாட்டு மக்களே கிளர்ந்தெழு வார்கள்.By Theekathir.


No comments:

Post a Comment