Wednesday 10 July 2013

என்.எல்சி: அத்தியாவசியப் பணி ஊழியர்களும் வேலை நிறுத்தம்


என்.எல்சி: அத்தியாவசியப் பணி ஊழியர்களும் வேலை நிறுத்தம்


என்.எல்.சி.யில் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடி வெடுத்ததை எதிர்த்து ஊழி யர்கள் கடந்த 3–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரு கிறார்கள்.புதனன்று (ஜூலை 10) 8–வது நாளாக வேலை நிறுத் தம் நீடித்து வருகிறது. செவ் வாயன்று அனைத்து தொழிற் சங்கத்தினர் என்.எல்.சி. முதல் அனல் மின்நிலை யத்தைமுற்றுகைப்போராட் டம் நடத்தினர்.
அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட னர். அதைத்தொடர்ந்து செவ்வாயன்று மாலை என்.எல்.சி. தொழிற்சங்கத்தி னர் கூடி ஆலோசனை நடத் தினர்.அப்போது என்.எல்.சி. யில் வேலை நிறுத்த விதி விலக்களிக்கப்பட்டிருந்த ஊழியர்களும் போராட்டத் தில் ஈடுபடுவது என்று முடிவு செய்தனர். என்.எல்.சி. மருத்துவமனை, மின்தடை அறிவிப்பு நிலையம், குடிநீர் வழங்கல்துறை, கட்டிட பரா மரிப்புத்துறை ஆகியவற் றுக்கு வேலை நிறுத்தத்தில் இருந்து விதிவிலக்கு அளித் திருந்தனர். இவற்றில் மொத் தம் 500 ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர்.அவர்களும்புதன்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடி வெடுத்தனர். அதன்படி புதனன்று காலை 6 மணியிலிருந்து வேலை நிறுத் தத்தை தொடங்கினர்.என்.எல்.சி. மருத்துவமனை யில் 150 ஊழியர்கள் உள்ள னர். அவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள னர். இதனால், மருத்துவ மனை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மின் தடை அறிவிப்பு நிலையத்தில் 150 ஊழியர் கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள்தான் அங்கு மின் பராமரிப்பு பணிகளை செய் வார்கள். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்தடை ஏற்பட்டாலோ, பழுது ஏற் பட்டாலோ அதை சரிசெய் வார்கள். அவர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்திருப்ப தால் பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.என்.எல்.சி. டவுன் ஷிப் முழுவதும் குடிநீர் வழங்கல் துறை மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அந்த ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்வதால் குடி நீர் சப்ளை கடுமையாக பாதிக்கும்.என்.எல்.சி.யில் அதிகாரி கள் மற்றும் என்ஜினீயர்கள் வேலை நிறுத்தத்தில் பங் கேற்கவில்லை.
அவர்களின் வீடுகளுக்கு தேவையான பராமரிப்பு பணிகளை இந்த ஊழியர்கள்தான் செய்து வந்தனர். இவர்களின் வேலை நிறுத்தத்தால் அதிகாரிக ளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்.ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மின் உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது. புதனன்று வழக் கத்தைவிட 420 மெகாவாட் மின் உற்பத்தி குறைவாக இருந்தது. அனல் மின் நிலை யங்களுக்கு தேவையான நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி முற்றிலும் நின்று விட்டதால் புதிதாக நிலக் கரி எதுவும் வரவில்லை. ஏற்கனவே இருப்பு வைத் துள்ள நிலக்கரியை மட்டுமே பயன்படுத்தி மின் உற்பத்தி செய்து வருகிறார்கள்.இன்னும் 2 நாட்களுக் குள் அனல் மின் நிலையத் துக்கு தேவையான நிலக்கரி களின் தட்டுப்பாடு ஏற்படும் என்று ஊழியர் சங்கங்கள் கூறுகின்றன. எனவே 2 நாட் களுக்கு பிறகு மின் உற்பத்தி வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.வேலை நிறுத்தத்தில் என்.எல்.சி. அதிகாரிகளும், என்ஜினியர்களும் பங்கேற் பது என்று முதலில் முடிவு செய்திருந்தனர். போராட் டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து அவர்கள் வேலை நிறுத் தத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.அவர்களையும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அழைப்பு விடுப்பது என ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதற் காக புதனன்று ஒவ்வொரு அதிகாரியின் வீடுகளுக்கும் தொழிற்சங்க நிர்வாகிகள் நேரடியாக சென்று வேலை நிறுத்த அழைப்பு நோட்டீசு களை வழங்கினர்.

No comments:

Post a Comment