Saturday 6 July 2013

என்எல்சி பங்கு விற்பனை : தொழிலாளர் இயக்கம் தடுத்து நிறுத்தும்


என்எல்சி பங்கு விற்பனை : தொழிலாளர் இயக்கம் தடுத்து நிறுத்தும்
ஜி.ராமகிருஷ்ணன் உறுதி
சென்னை, ஜூலை 6 -என்எல்சி பங்கு விற்பனை யை தொழிலாளர்கள் தங்களின் போராட்டம் மூலம் தடுத்து நிறுத்துவார்கள் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித் தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் சனிக்கிழமையன்று (ஜூலை 6) செய்தியாளர்களை சந்தித்தனர்.இச்சந்திப்பின் போது அவர்கள் கூறியது வருமாறு:
ஜி.ராமகிருஷ்ணன்: என் எல்சி பங்குகளை மாநில அரசு வாங்கிக் கொள்ளும் என்று முதலமைச்சர் நல்லெண்ணத் தின் அடிப்படையில் கூறினார். இது பிரச்சனைக்குத் தீர்வா காது. தொழிலாளர்களும், நிர் வாகமும் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் பிரச்சனை யை தீர்க்க முடியாது. மத்திய அரசு தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு முறையும் என் எல்சி பங்குகளை விற்க மத்திய அரசு முயற்சிக்கிற போதும் அதனை தொழிலாளர்கள் போராடி தடுத்துள்ளனர். தற் போதும் போராடுகின்றனர். ஊழியர்கள் பஞ்சப்படி கேட்டு போராடவில்லை. தேசத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தை நடத்துகிறார்கள். அந்த தேச பக்தப் போராட்டத்தை ஆதரிப் பது சரியானதுதான்.தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து 9ம் தேதி போராட்டம் நடத்து கின்றன. இடதுசாரி கட்சிகள் சார்பில் 11ம் தேதி முதற்கட்ட மாக சென்னையில் ஆர்ப்பாட் டம். அதன்பிறகு அடுத்தடுத்த போராட்டங்கள் நடைபெறும்.
தா.பாண்டியன்: என்எல்சி-யின் பங்கு மட்டுமல்ல, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு களை விற்கக் கூடாது என்பது தான் இடதுசாரிகளின் நிலை. இந்நிறுவனத்திற்காக கையகப் படுத்தப்பட்ட நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்து வது சட்ட விரோதம்.என்எல்சி-க்கு நிலத்தை கொடுத்த விவசாயிகள். நிலக்கரி வெட்டி மின் உற்பத்தி செய்கிற தொழிலாளர்கள், இதனால் பயனடைந்த தென்மாநில முத லமைச்சர்கள் ஆகியோரிடம் அனுமதி பெறாமல் பங்கு விற் பனை செய்யக்கூடாது. ஆண் டுக்கு 1300கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் தரும் என்எல்சி பங்குகளை 460 கோடி ரூபாய்க்கு தனியாருக்கு விற்பது ஏற்புடையது அல்ல. இது லாபத்தை தனியாருக்கு பிரித் துக் கொடுப்பதேயாகும்.பாஜக, காங்கிரஸ் கட்சி களைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் பங்கு விற்பனை யை எதிர்க்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற் சங்கங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நிற்கின்றன. சுமூகச் சூழலை உருவாக்க வேண்டும்.
டி.கே.ரங்கராஜன்: கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., கூட்டுபேர உரிமையுள்ள தொழிற் சங்கங் களை அழைத்து பேசாமல், சட்ட விரோதமாக பங்குகளை விற்கிறார்கள். அதனை எதிர்த்து சட்டப்பூர்வமான முறையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். வேலை நிறுத்தம் தொழிற்சங்க உரிமை. என்எல்சி விரிவாக்கத் திற்காக பங்குகளை விற்பதாகக் கூறும் போலித்தனமான வாதங் களை வைத்து மக்களையும், தொழிலாளர்களையும் ஏமாற்ற முடியாது என்றார்.
ஜி.ராமகிருஷ்ணன்: உண வுப் பாதுகாப்பு மசோதா குறித்து 2 வருடங்களாக விவாதிக்கப் பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் உணவு பாதுகாப்பு மசோதாவை அவ சரச் சட்டமாக கொண்டு வந் திருப்பது கண்டிக்கத்தக்கது. 90 விழுக்காடு மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்க வேண்டும். இடதுசாரிகள் கூறிய பல கருத் துக்கள் சட்டத்தில் இல்லை. இது தொடர்பானவற்றை நாடாளுமன்றத்தில் இடதுசாரி உறுப்பினர்கள் வலியுறுத்து வார்கள்.
தா.பாண்டியன்: அம்பானி குடும்பத்திற்கு சாதகமாக இயற்கை எரிவாயுவின் விலை 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 2014 ஏப்ரல் மாதம் விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் புதிய அரசு அமைய உள்ள நிலையில் அவசரமாக தற்போது உயர்த்த வேண்டிய தேவை என்ன? நாடாளுமன்ற நடைமுறை களையும், நெறிமுறைகளையும் மீறி கார்ப்பரேட் கம்பெனி களுக்கு நாட்டை அடமானம் வைக்கும் வேலையை மத்திய அரசு செய்துள்ளது.கனிம வளங்கள் எதுவாக இருந்தாலும் அதனை பொதுத் துறை நிறுவனங்கள் மூல மாகவே பயன்படுத்த வேண்டும். நாட்டின் செல்வாதாரத்தை பாதுகாக்க ஜனநாயக சக்தி களையும், அரசியல் கட்சிகளை யும் அணிதிரட்டுவோம்.

No comments:

Post a Comment