Friday 19 July 2013

சரியும் முதலாளித்துவம்

 கடந்த 10 ஆண்டுகளாகவே நெருக்கடி இருந்து வந்தது. ஆனால் அதனை மூடி மறைக்க அமெரிக்கா பல் வேறு யுத்திகளை கடைப்பிடித்து வந்தது. இந்நிலையில் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள 70 ஆயிரம் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக முடக்கப்பட்டது. பின்னர் இந்த நிறுவனங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அரசின் கைகளை விட்டு நழுவி தனியார் கைகளுக்குச் சென்றது. இருந்த போதிலும் பெரிய பலன் ஏற்படவில்லை. மாறாக டெட்ராய்ட் நகரம் மட்டும் சுமார் 1500 கோடி டாலர் அளவிற்கு கடன் சுமையில் சிக்கி யிருக்கிறது. இதனால் அந்நாட்டின் அரசு ஊழி யர்கள் சேமித்து வைத்திருந்த ஓய்வூதியத் தொகையைக் கூட அரசு வழங்க முடியாத கையறு நிலையில் இருக்கிறது. 20 லட்சம் பேர் வசித்த இடத்தில் இன்று வெறும் 70 ஆயிரம் பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அந்நகரத் தில் கொலைக் குற்றங்களின் அளவு பன் மடங்கு உயர்ந்திருக்கிறது. 2013ம் ஆண்டின் ஆரம்பத்தில் இயங்கிய ஆம்புலன்ஸ் வாகன சேவையில் மூன்றில் ஒரு பங்கு ஆம்புலன்ஸ் சேவை மட்டுமே தற்போது இயங்கி வருகிறது.
தெருவிளக்குகள் போடக் கூட நிதியில்லாத காரணத்தால் அவசர காலங்களில் காவல்துறை யினர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இத்தகவல்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் அவலட்சணங்களை வெட்ட வெளிச்சமாக்கி வருகிறது. இந்நிலையில் அந்த நகரம் வேறு வழியின்றி திவாலானதாக அறிவிக்கப்பட கோரப்பட்டிருக்கிறது.இப்படி தனது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாத அமெரிக்க ஏகாதிபத்தியம், நெருக்கடியின் சுமை யை வளர்முக நாடுகளின் மேல் ஏற்றுகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இந்திய வளங்களை அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு திறந்து விடச்சொல்லி அமெரிக்கா நிர் பந்திப்பது. இதற்கு அடி பணிந்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளொரு பொழுதும் ஒவ்வொரு துறையாக அமெரிக்கா விற்கு ஏலம் விட்டு வருகிறது.
மறுபுறம் மூன்றாம் அமெரிக்க நாடுகள் மீது ராணுவ தலையீட்டை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மனித சமுதாயத்திற்கெதிரான, கடுமையான தாக்குதலை ஏகாதிபத்தியம் தொடுத்திருக்கிறது. இதனை முறியடித்திடதேசபக்த ஜனநாயக இயக்கத்தின் சக்தி வலுப்பட வேண்டும்.



No comments:

Post a Comment