Thursday 4 July 2013

வேலை நிறுத்தம் தொடங்கியது

வேலை நிறுத்தம் தொடங்கியது !
நெய்வேலி லிக்னைட் நிறுவனம்  1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம்.
CPM கட்சியின் தலைவரான தோழர் ராமமூர்த்தியின் முன் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்
சோவியத்   யூனியனின் உதவியால் தொடங்கப்பட்ட நிறுவனம்
2007-08 ஆம் ஆண்டு 821 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்த நிறுவனம்
2011-12 ஆம் ஆண்டு 1411 கோடி ரூபாயும் 2012-13 ஆம் ஆண்டு 1459 கோடி ரூபாய்  லாபம் சம்பாதித்த நிறுவனம்
தற்போது 93.56 % பங்குகள் அரசின் கைவசம் உள்ளது
நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனம்.
18 000  நிரந்தர ஊழியர்களும் 13 000 ஒப்பந்த ஊழியர்களும் உள்ளனர்.
தமிழக மக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் முக்கிய பங்கை செலுத்துகிறது.
இந்த நிறுவனத்தின் 5% பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்திட மத்திய அரசு துடிக்கின்றது. இதன் மூலம் வெறும் 466 கோடி ரூபாய் மட்டுமே அரசுக்கு கிடைக்கும்.
மிகச் சொற்ப தொகை கிடைத்தாலும் மத்திய அரசு விற்பனையில் உறுதியாக இருப்பதன் காரணம் என்ன ?
மத்திய அரசுக்கு நிதி நெருக்கடியாம்…. 5 20 000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையாம்……
நிதிப் பற்றாக்குறை எப்படி ஏற்பட்டது ?
பண முதலைகளுக்கு வரி சலுகை
வட்டி சலுகை வராக் கடன் சலுகை
ஏற்றுமதி சலுகை இறக்குமதி சலுகை இப்படி ஏகப்பட்ட சலுகைகள்….
இதன் மூலம் மத்திய அரசுக்கு 5,73, 000 கோடி ரூபாய் செலவு. இதை மட்டும் அரசு ரத்து செய்தால் மத்திய பட்ஜெட்டில் 53,000 கோடி ரூபாய் மிச்சமாகும் .
466 கோடி ரூபாய்க்காக ஒரு கேந்திரமான நிறுவனத்தை விற்கலாமா? வோடாபோன் செய்த சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரியேப்பை  தடுத்து அதை வசூல் செய்தாலே போதுமே? மத்திய அரசு நிதி பற்றாக்குறை என்பது ஒரு நாடகமே!
அதன் நோக்கமெல்லாம் இந்திய பெரு முதலாளிகளுக்கும், வெளி நாட்டு முதலாளிகளுக்கும் இந்திய நாட்டு வளங்களையெல்லாம் தாரை வார்ப்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.
இந்திய நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் முதலாளிகளுக்கு விற்பது தான் அரசின் கொள்கை முடிவு என்று எந்தவித கூச்ச நாச்சமும் இல்லாமல் பிரகடனம் செய்துள்ளது
பொதுத்துறை பங்குகளை அடிமாட்டு விலைக்கு வாங்குவது மூலம் முதலாளிகளுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும்
மேலும் பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை மறுபடியும் சலுகை என்ற பெயரில் முதலாளிகளுக்கே திரும்ப போய் சேரும் .
கடந்த நிதி யாண்டில் 30 000 கோடி ரூபய் பெறுமான பொதுத்துறைபங்குகளை விற்பது என்று முடிவு செய்து சுமார் 23 956 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது. எனவே பங்கு விற்பனை என்பதை எந்த வடிவத்திலாவது ஏதாவது காரணத்தைக் காட்டி  முதலாளிகளுக்கு சேவை செய்ய அரசு முயற்சி செய்யும்.  அடுத்த கட்டமாக நமது நிறுவனம் உட்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய முயற்சி செய்யலாம். எனவே நாம்  பிற பகுதி தொழிலாளர் வர்க்கத்துடன் ஒன்றிணைந்து  பங்கு விற்பனை என்ற கொள்கையை எதிர்த்து போராடுவோம்.   


No comments:

Post a Comment