Wednesday 31 July 2013

நாசகர வேலை தொடரும் ப.சிதம்பரம் பேட்டி


நாசகர வேலை தொடரும் ப.சிதம்பரம் பேட்டி

புதுதில்லி, ஜூலை 31-அந்நிய முதலீட்டை மேலும் வரவேற்கும் வகை யில் நடவடிக்கைகள் எடுக் கப்படும் என்று மத்திய நிதி 
யமைச்சர் ப.சிதம்பரம் கூறி யுள்ளார்.நிதியமைச்சராக மீண் டும் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர் ந்து 

புதுதில்லியில் செய்தியா ளர்களிடம் அவர் பேசி னார்.நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.5 சதவீதத்திலி 

ருந்து 6 சதவீதமாக உயரும் என்ற வழக்கமான பல்லவி யை அவர் பாடினார். அத்தி யாவசியமல்லாத ஆடம் பரப் பொருட்களின் இறக்கு மதியை குறைக்கும் வகை யில் வரி அதிகரிக்கப்படும் என்றும், ஏற்றுமதியை ஊக் குவிப்பதற்கான 

நடவடிக் கைகள் மேற்கொள்ளப் படும் என்றும் அவர் கூறி னார்.
ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதைத் தடுக்க திட்டவட்டமான நடவடிக் கைகள் எதுவும் உடனடி யாக எடுக்கப்படாது என்ற 


போதும், அதற்கான முயற்சி தொடரும் என்றார்.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல் லாத அளவுக்கு புதனன்று 61.21 ஆக இருந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறி னார். அதே நேரத்தில் பல் வேறு துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடரும் என்று ப.சிதம் பரம் கூறினார்
.ஏற்றுமதி குறைவாகவும் இறக்குமதி அதிகமாகவும் இருப்பதால் நடப்பு கணக் கில் பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது. இந்தப் பற்றாக் குறையை குறைக்காவிட் டால் கடும் விளைவுகள் ஏற் படும். ஏற்கனவே வெளி நாட்டுக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அரசு தவித்து வருகிறது. இந்நிலை யில் நடப்புக் கணக்கு பற் றாக்குறையை கட்டாயம் குறைத்தே ஆக வேண்டிய தேவை உள்ளது என்று ப. சிதம்பரம் கூறினார்.தங்க இறக்குமதியை குறைக்க மேலும் நடவடிக் கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவ தாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment