Wednesday 3 July 2013

என்எல்சி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு : தொழிலாளர் உண்ணாவிரதம்

என்எல்சி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு : தொழிலாளர் உண்ணாவிரதம்


நெய்வேலியில் நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உரையாற்றினார்.
கடலூர், ஜுலை 2-பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெய் வேலியில் சிஐடியு சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற் றது. இதில் ஆயிரக்கணக் கான ஊழியர்கள் பங்கேற் றனர்.என்எல்சி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள் ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங் களும் 3ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கு முன்ன தாக, தொடர் போராட்டங் களையும் நடத்தி வருகின் றனர்.என்.எல்.சி தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் பொறியாளர்கள், அதிகாரி கள் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நெய் வேலி பணிமனை பேருந்து நிலையம் அருகே ஸ்கீயூ பாலம் அருகே உண்ணா விரதப் போராட்டம் நடை பெற்றது. காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கி யது.தொமுச மாநில பொதுச் செயலாளர் ராசவன்னியன் தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்கத் தின் செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம் உண்ணாவிரதத் தைத் தொடங்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன், மாவட்டச் செய லாளர் பி.கருப்பையன், தொமுச பேரவைச் செய லாளர் சண்முகம், திராவிடர் கழக தமிழர் பேரவை தலை வர் சுப.வீரபாண்டியன், விடு தலை சிறுத்தைகள் கட்சி யின் மாநில ஒருங்கிணைப் பாளர் சிந்தனை செல்வன், திக மாநிலச் செயலாளர் துரை.சந்திரசேகரன், பிடி எஸ் தலைவர் திலகர், ஏஐயு டிசிசி அனவரதன், ஐஎன்டி யுசி சுந்தர மூர்த்தி, சிபிஎம் நகரச் செயலாளர் எஸ். திரு அரசு, சிஐடியு சங்க தலை வர் ஜி.குப்புசாமி, பொதுச் செயலாளர் ஏ.வேல்முருகன் மற்றும் பல்வேறு சங்கங் களின் தலைவர்கள் உரை யாற்றினர். இந்த உண்ணா விரதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பங்கேற்றனர்.இந்த உண்ணாவிர தத்தையொட்டி நெய்வேலி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டிருந்தது.தொழிற்சங்கம் 16, பொறியாளர் சங்கம் 3, நலச் சங்கங்கள் 2, 1 அதிகாரி சங் கம் உட்பட 22 தொழிற் சங் கங்கள் உள்ளன. இந்த அனைத்து தொழிற்சங் கங் களும் புதன்கிழமை இரவு முதல் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. என்எல்சி பங்கு விற்ப னையை எதிர்த்து நடை பெறும் இந்தப் போராட்டத் தில் அனைவரும் கலந்து கொள்வதால் மூன்று அனல் மின் நிலையங்கள், 3 நிலக்கரி சுரங்கங்களின் உற் பத்தி முழுமையாக பாதிக் கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தியும், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியும் முற்றிலும் பாதிக்கப்படும். நெய்வேலியில் உற்பத்தி யாகும் மின்சாரத்தில் 60 சதவீதம் தமிழ்நாட்டுக்கும், மீதி மின்சாரங்கள் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநி லங்களுக்கும் அனுப்பப் பட்டு வந்தன. நெய்வேலி மின்சாரம் தடைபடுவதால் அந்த மாநிலங்களில் கடு மையாக மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.என்எல்சி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 4-ந்தேதி நெய் வேலியில் கடையடைப்புப் போராட்டம் நடத்த வியா பாரிகள் முடிவு செய்துள் ளனர். எனவே நெய்வேலி முழுவதும் கடைகள் அடைக்கப்படும்.
நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் : என்எல்சி அனைத்து தொழிற்சங்கங்களும் நள் ளிரவு முதல் காலவரை யற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்குகின் றனர். இதனால் கடுமை யான மின் தட்டுப்பாடு ஏற் படும் நிலை எழுந்துள்ளது. 4ம் தேதி நெய்வேலியில் முழு கடையடைப்பு போராட் டமும் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment