Wednesday 3 July 2013

இந்திய தூதரகத்தை வேவு பார்த்த அமெரிக்காவுக்கு சல்மான் குர்ஷித் வக்காலத்து


இந்திய தூதரகத்தை வேவு பார்த்த அமெரிக்காவுக்கு சல்மான் குர்ஷித் வக்காலத்து


எட்வர்டு ஸ்னோடென்

அமெரிக்காவின் உளவு நிறு வனமான தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியில் (என்ஐஏ) பணியாற் றிய எட்வர்டு ஸ்னோடென், உளவு நிறுவனத்தின் நாசகரப் பணிகளை அம்பலப்படுத்தியதால் அவரைக் கைது செய்ய அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. ஹாங்காங்கில் இருந்த ஸ்னோடென் அங்கிருந்து வெளியேறி, ரஷ்யாவிற்கு தஞ்சம் அடையச்சென்றுள்ளார். ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாத தால் அவர் மாஸ்கோ விமான நிலையத்தைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனக்கு அடைக் கலம் அளிக்க வேண்டும் என்று ரஷ்யா, சீனா, பிரேசில், இந்தியா மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஸ்னோ டென் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை இந்தியா நிரா கரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எர் வர்டு ஸ்னோடென் விடுத்த கோரிக்கை பற்றி மாஸ்கோவில் உள்ள தூதரகம் மூலம் உறுதி செய் யப்பட்டது. அவரது கோரிக் கையை நாங்கள் கவனத்துடன் ஆய்வு செய்தோம். அதன்பின்னர், அவரது கோரிக்கையை ஏற்பதில் லை என்ற முடிவுக்கு வந்திருக் கிறோம்” என்றார்.
இந்தியத் தூதரகத்தை வேவு பார்த்த : அமெரிக்காஇந்தியத்தூதரகம் உள்பட மொத் தம் 38 தூதரகங்களை அமெரிக்கா உளவு பார்த்த விவரத்தை வெளி யிட்டுள்ளார், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியில் பணியாற்றியவரான எட்வர்ட் ஸ்னோடென். ‘விக்கிலீக்ஸ்’ இணையதளத்தைத் தொடர்ந்து தற்போது ஸ்னோடென் மூலம் பெரும் தலைவலியில் சிக்கியுள் ளது அமெரிக்கா. ஸ்னோடென், தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியில் முன்பு கம்ப்யூட்டர் பொறியாள ராக வேலை பார்த்தவர். இவர் தற் போது அமெரிக்காவின் உளவுப் பணிகள் குறித்த பல பயங்கர ரகசி யங்களை உலகிற்கு அம்பலப் படுத்தி வைத்து வருகிறார். இதனால் அமெரிக்கா ஆத்திரம் அடைந் துள்ளது. இதையடுத்து நாட்டை விட்டே வெளியேறியுள்ள ஸ்னோ டென், தற்போது ரஷ்யாவில் உள்ளார்.
ஸ்னோடென் வெளியிட்டுள்ள ஒரு தகவலில், இந்தியத் தூதரகம் உள்பட 38 நாடுகளின் தூதரங் களை அமெரிக்க அரசு உளவு பார்த்ததாக கூறியுள்ளார். இந்தத் தூத ரகங்கள் அனைத்தும் அமெரிக் காவில் உள்ளவையாகும்.இந்தத் தூதரகங்களின் இன்டர் நெட் கேபிள்களில் ரகசியமான முறையில் நவீன ஆண்டெனாக் களைச் சொருகி அதன் மூலம் முக் கியத் தகவல்களை அமெரிக்க உளவாளிகள் கள்ளத்தனமாகப் பெற்றுள்ளனர்.இந்தியா தவிர தனது நட்பு நாடு களின் தூதரகங்களையும் அமெ ரிக்கா இவ்வாறு உளவு பார்த்துள் ளது. இதுகுறித்த தகவல்களை ‘தி கார்டியன்’ பத்திரிகை விரிவாக வெளியிட்டுள்ளது.ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளின் தூதரகங்களையும் அமெரிக்கா உளவு பார்த்துள்ள தாக தகவல்கள் கூறுவதால், அந்த நாடுகள் கொதிப்படைந்துள்ளன. அமெரிக்க அரசிடம் விளக்கம் கோரியுள்ளன.அமெரிக்காவின் மிக நெருக்க மான கூட்டாளியாக உள்ளது ஜப் பான். அதேபோல தென் கொரியா, மெக்ஸிகோவும் கூட்டாளிகள் தான். இவற்றின் தூதரகங்களையும் கூட அமெரிக்கா விடவில்லை.ஒவ்வொரு நாட்டுத் தூதரகத் தையும் உளவு பார்க்க சங்கேத வார்த்தைகளை அமெரிக்கா பயன் படுத்தியுள்ளது. ஆனால் இந்தியா வுக்கு என்ன பெயர் வைத்தனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
தஞ்சம் அளிக்க மறுப்பு : இதனிடையே ஸ்னோடென் இந்தியா, ஈக்வடார் உள்ளிட்ட 20 நாடுகளிடம் அடைக்கலம் கோரி கடிதம் எழுதியிருப்பதாக விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டது. இது பற்றி, புருனேவில் நடைபெறும் ஏசியான் மாநாட்டுக்குச் சென் றுள்ள சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சல் மான் குர்ஷித், கடந்த காலங்களில் இந்தியா அடைக்கலம் கொடுத் திருக்கிறது. ஆனால் அடைக்கலம் கோருகிறவர்கள் அனைவரும் இந்தியா வர இது ஒன்றும் திறந்த வீடல்ல.. எங்களுக்கும் சில கொள் கைகள் இருக்கின்றன என்றார்.
-------------------------------------------
சிபிஎம் கண்டனம்
-------------------------------------------
புதுதில்லி, ஜூலை 2-
அமெரிக்காவின் உளவு வேலைகுறித்து சற்றும் கவலைப்படாதது மட்டுமல்ல, அதற்கு வக்காலத்து வாங்கும் விதத்தில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத் துக்கள் கூறியிருப்பது வெட்கக்கேடானது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சாடியுள்ளது. இது தொடர்பாக அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஏஜென்சி எனும் உளவு நிறுவனம், வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மட் டுமல்லாமல் அதேபோன்று 37 இதர நாடுகளின் தூதரகங்க ளின் கணினிகளில் உள்ள இணைய தளப் பதிவுகள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் மிகப் பெரிய அளவில் களவாடி இருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக் கிறது. இவற்றை அங்கே பணியாற்றி, இப்போது வெளியேறி யிருக்கிற எட்வர்ட் ஸ்னோடென் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். ஐ.மு.கூட்டணி அரசாங்கம் அமெரிக்க அரசின் கய மைத்தனமான இத்தகைய உளவு வேலைக்கு எதிராக கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்திட வேண்டும்.
மாறாக, அதன் வெளியுறவு அமைச்சரான சல்மான் குர்ஷித் அவ்வாறு அமெ ரிக்க அரசு கள்ளத்தனமாகத் தலையிட்டுக் கொண்டிருப் பதை, ‘‘இது மற்றவர் விஷயங்களில் உரிமையின்றித் தலையிடும் பிரச்சனை அல்ல. இது கணினி ஆய்வு மற்றும் அழைப்புகளை கணினி மூலம் ஆய்வு செய்யும் விதம்’’ என்று கூறி நியாயப்படுத்தி இருக்கிறார். அமெரிக்காவின் உளவு ஸ்தாபனம், வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் நடவடிக்கைகளை உளவு பார்ப்பது குறித்துக் சற்றும் கவலைப்படாத ஓர் அயல்துறை அமைச்சரை இந்தியா பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளான ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளே கூட அமெரிக்க அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்திருக்கக்கூடிய நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சரின் வெட்கக்கேடான கூற்று வெளி வந்திருக்கிறது.மன்மோகன் சிங் அரசாங்கம், அமெரிக்க அரசின் கள்ளத் தனமான உளவு நடவடிக்கைகளுக்காக கடும் எதிர்ப்பி னைத் தெரிவித்திட வேண்டும். இதனை அமெரிக்கா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தீக்கதிர்

No comments:

Post a Comment