Friday 5 July 2013

தடையை மீறி என்எல்சி தொழிலாளர் 2வது நாளாக வேலை நிறுத்தம்

தடையை மீறி என்எல்சி தொழிலாளர் 2வது நாளாக வேலை நிறுத்தம் : முடங்கியது நெய்வேலி

கடலூர், ஜூலை 4-என்எல்சி தொழிலாளர் களின் வேலை நிறுத்தத் திற்கு சென்னை உயர் நீதி மன்றம் விதித்த தடையை யும் மீறி தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு செய்தது. இதற்கு தொழிலா ளர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இந்த தொழிலா ளர்களின் நியாயமான கோரிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆத ரவு தெரிவித்துள்ளன.இந் நிலையிலும் மத்திய அரசு தனது முடிவு திரும் பப் பெற எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
ஆகவே ஒட்டுமொத்தத் தொழிலா ளர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட் டத்தை நடத்தத் தீர்மானித் தனர்.இது குறித்த அறிவிப்பை யும் முறைப்படி நிர்வாகத் திற்கு தெரிவித்தனர். இதற் கிடையில் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்ப தாகக் கூறி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட் டங்களில் பங்கேற்ற பொறி யாளர்கள் மற்றும் அதிகா ரிகள் சங்கங்கள் நிறுவனத் தின் பிரித்தாளும் சூழ்ச்சி யில் சிக்கி வேலை நிறுத்த அறிவிப்பிற்கு 1 மணி நேரத் துக்கு முன்னதாக போராட் டத்தில் கலந்து கொள்ளா மல் பின்வாங்கின.ஆனாலும் தொழிற் சங்கக் கூட்டமைப்பினர் திட்டமிடப்படி ஜுலை 3ம் தேதி இரவு 11 மணி முதல் உறுதியுடன் போராட்டத் தை நடத்தி வருகின்றனர். காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள என்எல்சி ஊழியர்கள் அடுத்த கட்டப் போராட்டத்திற்கும் தயா ராகி வருகின்றனர்.
நிரந்தரத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒப்பந்த ஊழியர் கள் அனை வரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடு பட முடிவு செய்துள்ளனர்.நாள் ஒன்றுக்கு 2,490 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகும் என்எல்சி-யில் 23 ஆயிரம் தொழிலா ளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற் கொண்டுள்ளதால் மின் உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத் தப்படும். மத்திய அரசு தனது பிடிவாதப்போக்கை மாற்றிக்கொள்ளும் வரை இப்போராட்டம் தொட ரும் என்று தொழிலாளர் கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
முடங்கியது நெய்வேலி : பழுப்பு நிலக்கரி நிறு வனத் தொழிலாளர்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வியாழனன்று (ஜுலை4) நெய்வேலியில் முழு அடைப்புப் போராட் டம் நடைபெற்றது. இத னால் காலையிலிருந்தே பேருந்து, ஆட்டோ, வேன் உள்ளிட்ட எந்த வாகனமும் ஓடவில்லை. நெய்வேலி நக ரம் முழுவதிலுமுள்ள வணிக வளாகங்கள் அனைத் தும் மூடப்பட்டிருந்தன. நெய்வேலி நகரத்திற்கு வெளியே உள்ள தெற்குவள் ளுர், மந்தாரக்குப்பம், பெரி யக்குறிச்சி, சேப்பளாநத்தம், ஆர்ச்கேட், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மூடப் பட்டிருந்தன. நெய்வேலி நகரத்தி லுள்ள 13 பள்ளிகளும் மூடப்பட்டன. பள்ளிக்குச் செல்லும் ஆட்டோ, வேன் களும் ஓடவில்லை. என் எல்சி றுவனத்திற்கு சொந்த மான பேருந்துகளை இயக் குவதற்கு முயற்சி செய்யப் பட்டன. ஆனால், ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு வரவில் லை. இதனால் அனைத்துப் பேருந்துகளும் பணிமனை களிலேயே நிறுத்தப்பட்டி ருந்தன. தனியார் மற்றும் அரசு பேருந்துகளை நெய் வேலி நகர பகுதிக்குள் அனு மதிக்கவில்லை. என்.எல்.சி. நுழைவு வாயில் வரை வந்து விட்டு அவை திரும்பிச் சென்றன. இதுகுறித்து நெய்வேலி வர்த்தகர் சங்கத் தலைவர் ஆர்.பி.பன்னீர்செல்வம் கூறியதாவது:-லாபம் தரும் என்எல்சி பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க அனும திக்க மாட்டோம். இது மக்களின் சொத்து. தனியாரி டம் செல்ல ஒருபோதும் விடமாட்டோம். இந்த நிறு வனத்தைப் பாதுகாப்பது எங்களின் கடமை. இந்தப் போராட்டத்திற்கு பிறகும் மத்திய அரசு பின்வாங்க வில்லை என்றால் மாவட் டம் முழுவதும் இந்த போராட்டத்தை விரிவுபடுத் துவோம் என்றார்.
இன்று சிபிஎம் ஆர்ப்பாட்டம் : என்எல்சி தொழிலாளர் களுக்கு ஆதரவாக வெள் ளியன்று மாவட்ட தலை நகரங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப் பாட்டம் நடத்துகிறது                                                                                                                                                                      

No comments:

Post a Comment